சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் அம்ரித்சர் மாவட்டம் அடாரி எல்லைப்பகுதி பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இருநாட்டு படையினரும் இந்த எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த எல்லைப்பகுதியில் தினமும் காலை இருநாட்டு பாதுகாப்புப்படையினரும் அவரவர் நாட்டு தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக்கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக, இந்திய சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அடாரி – வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்வை கண்டுகளிப்பர்.
இந்நிலையில், வாகா எல்லையில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி (ரூ.3.5) மூன்றரை கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. 55டன் எடையுள்ள ஸ்டீல் (கம்பம்) பயன் படுத்தப்பட்டுள்ளது.
கொடி கம்பத்தின் உயரம் 360 அடி ஆகும். கொடி கம்பத்தை நிறுத்த (நடுவதற்கு) கிரேன் செலவாக 60லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. கொடியின் உயரம் 80அடி, அகலம் 120 அடி தேவைப்படும்போது12 கொடிகள் (மாற்று) தயாராக உள்ளன. இது ஒரு உலக சாதனை ஆகும். வாகா எல்லை கோட்டில் இருந்து 200 மீட்டர் உள்புறமாக மிக கம்பீரமாக இந்திய தேசிய கொடி பறக்கிறது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.