IPL 2025 Restarts, Available Overseas Players: ஐபிஎல் தொடர் இந்தியா – பாகிஸ்தான் பதற்றம் காரணமாக கடந்த மே 8ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி போட்டியின் போதே பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்திருந்தது.
இதனால் பல வெளிநாட்டு வீரர்களும் மே 9ஆம் தேதி அன்றே தங்களின் தாய்நாட்டிற்கு திரும்பினர். வெகு சிலர் மட்டுமே தங்களின் அணிகளுடன் தங்கியிருந்தனர். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்த பிற்பாடு ஐபிஎல் தொடரின் மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டது.
மே 17ஆம் தேதி (இன்று) முதல் ஜூன் 3ஆம் தேதிவரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில், எந்தெந்த அணியில் எந்தெந்த வெளிநாட்டு வீரர்கள் வரும் போட்டிகளில் விளையாடுகிறார்கள், விளையாடவில்லை என்பதை இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நூர் அகமது, மதீஷா பதிரானா, டிவால்ட் பிரேவிஸ், டெவான் கான்வே உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே விளையாடுவார்கள். சாம் கரண், ஜேமி ஓவர்டன், ரச்சின் ரவீந்திரா, நாதன் எல்லிஸ் உள்ளிட்டோர் வரவில்லை.
மும்பை இந்தியன்ஸ்
பெவான் ஜேக்கப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், ரீஸ் டோப்ளி, முஜீப் உர் ரஹ்மான் உள்ளிட்டோர் விளையாடுவார்கள். வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கில்டன், கார்பின் பாஷ் உள்ளிட்டோர் லீக் சுற்று முடியும் வரை விளையாடுவார்கள். வில் ஜாக்ஸ் இடத்தில் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ரிக்கில்டன் இடத்தில் ரிச்சர்ட் கிளீசென் அணியில் இணைவார்கள்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ரொமாரியோ ஷெப்பர்ட், பில் சால்ட், டிம் டேவிட், லியம் லிவிங்ஸ்டன், நுவான் துஷாரா உள்ளிட்டோர் விளையாடுவார்கள். ஜேக்கப் பெத்தெல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவார். லுங்கி இங்கிடி லீக் சுற்றுவரை விளையாடுவார். ஹசில்வுட் தற்போதைக்கு வரவில்லை. பிளே ஆப் சென்றால் மீண்டும் ஹேசில்வுட் வருவதாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், குவின்டன் டி காக், ஸ்பென்சர் ஜான்சன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆன்ரிச் நோர்க்கியா உள்ளிட்டோர் விளையாடுவார்கள். ரோவ்மான் பவல், மொயின் அலி உள்ளிட்டோர் விளையாட மாட்டார்கள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், கமிந்து மெண்டிஸ், இஷான் மலிங்கா உள்ளிட்டோர் விளையாடுவார்கள். வியான் முல்டர் மட்டும் வரவில்லை.
பஞ்சாப் கிங்ஸ்
மிட்செல் ஓவன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சேவியர் பார்ட்லெட் ஆகியோர் விளையாடுவார்கள். மார்கோ யான்சன் லீக் சுற்று முடியும் வரை இருப்பார். லாக்கி பெர்குசனுக்கு பதில் கைல் ஜேமீசனை தற்காலிக மாற்று வீரராக எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். ஜாஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்டோர் வரவில்லை.
டெல்லி கேப்பிடல்ஸ்
ஃபாப் டு பிளெசிஸ், துஷ்மந்தா சமீரா, சேதிகுல்லா அடல் உள்ளிட்டோர் விளையாடுவார்கள். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் லீக் சுற்று முடியும் வரை விளையாடுவார். டோனோவன் ஃபெரேரா, மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் வரவில்லை. முஸ்தபிஷூர் ரஹ்மான் விளையாடுவதிலும் சந்தேகம் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிம்ரோன் ஹெட்மயர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஃபசல்ஹக் ஃபரூக்கி, குவெனா மஃபாகா, வஹிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா உள்ளிட்டோர் விளையாடுவார்கள். ஜோப்ரா ஆர்ச்சர், நாண்ட்ரே பர்க்கர் உள்ளிட்டோர் வரவில்லை.
குஜராத் டைட்டன்ஸ்
ஷெப்ரேன் ரூதர்போர்ட், ரஷித் கான், கரீம் ஜனட், தசுன் ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் விளையாடுவார்கள். ஜாஸ் பட்லர், ககிசோ ரபாடா உள்ளிட்டோர் லீக் சுற்று வரை இருப்பார்கள். லீக் சுற்றுக்கு பின்னர் பட்லருக்கு பதில் குசால் மெண்டிஸ் வந்துவிடுவார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
எய்டன் மார்க்ரம் லீக் சுற்று வரை விளையாடுவார். மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், மேத்யூ பிரட்ஸ்கி உள்ளிட்டோர் விளையாடுவார்கள். காயமடைந்த மயங்க் யாதவிற்கு பதில் வில் ஓ ரூர்க் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | IPL 2025: முட்டிமோதும் 7 அணிகள்… பிளே ஆப் போகப்போவது யார் யார்?