IPL 2025 CSK vs RR: ஐபிஎல் 2025 தொடர் தற்போது ரீ-ஸ்டார்ட் ஆகி இரண்டு நாள்கள்தான் ஆகிறது. இன்னும் 10 லீக் போட்டிகள் மிச்சம் இருக்கிறது. மே 27ஆம் தேதியோடு லீக் சுற்று நிறைவடைகிறது.
CSK vs RR: தகுதிப்பெறும் அணிகள் எவை?
அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட மூன்று அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராஜ் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
நான்காவது அணியாக யார் செல்லப்போகிறார்கள் என்பதே தற்போது ஐபிஎல் தொடரின் ஒரே சுவாரஸ்யமாக உள்ளது. அந்த இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முட்டிமோதும். அதுமட்டுமின்றி முதல் நான்கு இடங்களில் எந்தெந்த இடம் யார் யாருக்கு?, குவாலிஃபயர் 1 போட்டிக்கு தகுதிபெறப்போகும் அணிகள் எவை?, எலிமினேட்டருக்கு தகுதிபெறப்போகும் அணிகள் எவை என்பதையே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
CSK vs RR: சிஎஸ்கேவுக்கு முக்கியமான போட்டி
இந்த சூழலில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை (மே 20) சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. சிஎஸ்கேவுக்கு இது 13வது லீக் போட்டி, ராஜஸ்தானுக்கு இது கடைசி மற்றும் 14வது போட்டியாகும். இதில் தோல்வியடையும் அணி கடைசி இடத்தில் உறுதிசெய்துவிடும் எனலாம்.
சிஎஸ்கே அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தொடரை முடித்ததே இல்லை. அந்த பெருமையை தொடர ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் வெல்ல வேண்டும். அடுத்து, கடைசியாக மே 25ஆம் தேதி சிஎஸ்கே, குஜராத் அணியுடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் ராஜஸ்தான் போட்டியிலேயே வென்றால் மட்டுமே கடைசி இடத்தை தவிர்க்க முடியும்.
CSK vs RR: சிஎஸ்கே பிளேயிங் லெவன்
அந்த வகையில், சிஎஸ்கே நிச்சயம் பலமான பிளேயிங் லெவனை அமைக்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், டெவான் கான்வே, டிவால்ட் பிரேவிஸ், நூர் அகமது, பதிரானா ஆகிய நால்வர் மட்டுமே சிஎஸ்கே அணியுடன் மீண்டும் இணைந்திருப்பதால் அவர்களே பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் எனலாம். மேலும் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் நிச்சயம் இடம்பெறுவார்கள். ராஜஸ்தான் உடனான போட்டியில் சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை இங்கு பார்க்கலாம்.
டெவோன் கான்வே, ஆயுஷ் மத்ரே, உர்வில் பட்டேல், ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: மதீஷா பத்திரனா
மேலும் படிக்க | “தோனி ஒரு தேசத்துரோகி”.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?