நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதுவரை 12 லீக் ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. சிஎஸ்கே அணியை கடந்த ஆண்டு முதல் ருதுராஜ் கெய்க்வாட்டே வழிநடத்தி வருகிறார். அதன்படி இந்த ஆண்டும் அவரே அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் தோனியிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு தொடரைவிட்டு விலகுவதாக கூறினார்.
இந்த திடீர் விலகலுக்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட காயம் என கூறப்பட்டது. இதையடுத்து அணியை தோனி வழிநடத்தினார். சரி சென்னை அணி தற்போதாவது சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் தோல்விகளை தழுவி முதல் அணியாக எலிமினேட் ஆனது. சென்னை அணி இதுவரை 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அதேசமயம் நடப்பாண்டை போல கடுமையாக சொதப்பியதும் கிடையாது.
ருதுராஜ் நீக்கமா?
இந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் இருந்து நீக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய வீரர்களாக களம் இறக்கப்பட ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷித் மற்றும் உர்வில் படேல் ஆகியோர் இருப்பார்கள் என்றும், இதில் எவரேனும் சொதப்பினால் சாம் கரனை பேக்கப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அணியில் நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டை வெளியேற்றினால், ரூ. 18 கோடி கிடைக்கும். ருதுராஜை வெளியேற்றி மீண்டும் வாங்கினால் அடிப்படை தொகையான ரு. 2 கோடியில் கூட வாங்க முடியும் என்பதால், இந்த முடிவை சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சஞ்சு சாம்சனையும் சிஎஸ்கே அணி வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்குமான உறவி சரிவர இல்லாததால், அவர் ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது. அதனால் அவரை வாங்கி ஓபனராக இறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
புதிய கேப்டன்?
ருதுராஜ் கெய்க்வாட்டிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படும் நிலையில், ஷிவம் துபே-க்கு கேப்டன் பதவியை அளிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தீபக் ஹூடா போன்ற வீரர்களை அணியில் எடுக்க ரெக்கமண்ட் செய்தாராம். ஆனால் ஹூடா சொதப்பினார். அதேபோல், அஷ்வின் உள்ளிட்டோரை ருதுராஜ் சரியாக பயன்படுத்தவில்லையாம். மொத்தத்தில் ருதுராஜின் கேப்டன்ஷி அந்த அணியின் நிர்வாகத்திற்கு திருப்தி அளிக்காததால், இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: “தோல்விக்கு காரணமே இவர்கள்தான்”.. ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!
மேலும் படிங்க: IPL 2025: அதிக முறை பிளே ஆஃப் சென்ற அணிகள்.. லிஸ்ட் இதோ!