2025 ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டம் இன்று (மே 19) லக்னோ எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் சிறப்பாக விளையாடி முறையே 65 மற்றும் 61 ரன்களை எடுத்தனர். இவர்களை தவிர்த்து பூரான் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவர் 45 ரன்களை எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பினார். அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக அதிகபட்சமாக ஈசான் மலிங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. இந்த அணியில் வழக்கமாக டிரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்குவர். டிரவிஸ் ஹெட்டுக்கு காச்சல் என்பதால், அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் அதர்வா டைட் இறங்கினார்.
ஆனால் அவர் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷான் களம் இறங்கினார். இந்த கூட்டணி சிறப்பாக விளையாடியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின்னர் திக்வேஷ் ரதி பந்தில் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து இஷான் கிஷான் 35 ரன்களில் ஆட்டமிழக்க, கிளசென் மற்றும் கமிந்து மண்டிஸ் ஆட்டத்தை முடித்து வைத்தனர். சன்ரைசர்ஸ் அணி 18.2 ஓவர்கள் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், லக்னோ அணி வெளியேறினது.
மீதம் இருந்த மூன்று போட்டிகளிலும் நல்ல வெற்றியை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த லக்னோ அணி இப்போட்டியில் தோற்றதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு இனி டெல்லி மற்றும் மும்பை அணி மட்டுமே போட்டிப்போடும்.
மேலும் படிங்க: ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?
மேலும் படிங்க: சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?