ரிஷப் பண்ட் இதை செய்தால், பழைய நிலைக்கு திரும்பலாம்.. பிரச்சனையை சொன்ன யோக்ராஜ் சிங்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கடுமையாக சொதப்பி உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அவர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த ஆண்டு இல்லாத வகையில், இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி இருக்கிறார். 

இதுவரை 12 போட்டிகளில் பேட்டிங் செய்து வெறும் 135 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசை 12.27 ஆக உள்ளது. இது ஒரு மோசமான சாதனைக்கு வழிவகுக்கிறது. ஒரு ஐபிஎல் அணியின் இந்திய கேப்டனாக ஒரு மோசமான சாதனையாகும். மீதமுள்ள போட்டிகளில் இன்னும் 9 ரன்களை எடுக்கவில்லை என்றால், இயான் மோர்கனின் மோசமான சாதனையை முறியடிப்பார். மோசமான பங்களிப்பு காரணமாக ரிஷப் பண்ட் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. 

இந்த நிலையில், ரிஷப் பண்ட் இதை செய்தால், அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். மேலும், அவர் ரிஷப் பண்டின் பிரச்சனையை வெறும் 5 நிமிடங்களில் சரி செய்து விடுவேன் என்றும் கூறி உள்ளார். 

அவர் கூறியதாவது, ரிஷப் பண்ட் பிரச்சனையை நான் பெறும் 5 நிமிடங்களில் சரி செய்து விடுவேன். அவரது தலை நிலையாக இருக்கவில்லை. இடது தோள் அதிகமாக விரிவடைகிறது. அவரது பிரச்சனையில் கவனம் செலுத்தி அதை சரி செய்தால், அவர் நிச்சயம் விரைவில் தனது சிறந்த செயல்பாட்டுக்கு திரும்புவார் என யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

யோக்ராஜ் சிங் கூறிய இந்த பிரச்சனை உண்மையா என ரசிகர்கள் பலர் ஆராயத் தொடங்கி உள்ளனர். மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் அவரது பேட்டிங் பிரச்சனையை சரி செய்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  

மேலும் படிங்க: ஐபிஎல் தொடர் முடிஞ்சதும் ரோஹித் சர்மாவுக்கு ஆபரேஷன்… ஏன்…? என்னாச்சு…?

மேலும் படிங்க: “சிஎஸ்கே அணி தானாக முன்னேறும்”.. தோனி ஓய்வு குறித்து சஞ்சய் பங்கர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.