நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கடுமையாக சொதப்பி இருக்கும் நிலையில், பலரும் அந்த அணியை விமர்சித்து வருவதோடு,தோனியின் ஓய்வு குறித்தும் பேசி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தோனியின் ஓய்வு குறித்து பேசியிருப்பது அவரது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், சிஎஸ்கே அணி தானாக முன்னேறும் என நினைத்து ஓய்வை அறிவித்திருப்பேன் என அவர் கூறி உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தோனியின் ஓய்வு குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், தோனி தற்போதும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவர் 43 வயதிலும் விளையாடுகிறார். அடுத்த ஐபிஎல் சீசனிலும் அவர் விளையாடுவார் என தெரிகிறது.
சஞ்சய் பங்கர் கூறியதாவது, தோனி இடத்தில் நான் இருந்திருந்தால், போது என கூறியிருப்பேன். அணியின் நலனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பேன். 43 வயதிலும் ஏன் இப்படியான கடினமான தொடரில் விளையாட வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்த வயதில் நீங்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினாலும், எதற்கு ஒரு உடலை இப்படி கஷ்டப்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால், இது அனைத்துமே தோனி மனதில் என்ன இருக்கிறதோ அதை பொறுத்துதான்.
மேலும், அணியின் அந்த இடத்தில் இருக்கும்போது, அணியின் அடுத்த கட்டம் வேகமாக நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அது எத்தனை காலத்திற்கு என்று சொல்ல முடியாது. அப்போது நம்மை நாம் அமைதிபடுத்திக்கொண்டு, நான் இப்போது விலகுகிறேன். இந்த அணி தானாகவே வளர்ச்சி அடையும். இன்னும் ஒரு வருடம் ஆகலாம். ஆனால் அது வளர்ச்சி அடையும் வரை நான் அங்கேயே இருக்கப்போவதில்லை. என்ற முடிவை எடுப்பேன். தோனியின் இடத்தில் இருந்திருந்தால், நான் இப்படிதான் சிந்தித்து இருப்பேன் என கூறி இருக்கிறார்.
மேலும் படிங்க: பும்ரா – கில் – பண்ட்… இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்…? இந்த தேதியில் அறிவிப்பு!
மேலும் படிங்க: வயதாகிவிட்டது போது.. அணியை விட்டு வெளியேறுங்கள்.. தோனியை அட்டாக் செய்த சீக்கா!