மணிரத்னம் இயக்கியிருக்கும் ‘தக் லைஃப்’ ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. கமல் ஹாசன் சொன்ன ஒரு வரி ஐடியாவிலிருந்து இந்தப் படத்தின் கதையை விரித்திருக்கிறார் மணிரத்னம்.
படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘தக் லைஃப்’ குழுவினர் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சுற்றி வருகின்றனர்.

நேற்று (20.5.25) மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திரைப்படம் தொடர்பாகச் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார் மணிரத்னம்.
பேசத் தொடங்கிய அவர், “முதன் முதலில் இந்தப் படத்திற்கு வந்தவர் கமல் ஹாசன்தான். அதன் பிறகுதான் ‘தக் லைஃப்’ படத்தின் கதை உருவானது. இந்தப் படத்தைத் தொடங்கும்போது பல விஷயங்களை நாங்கள் பேசினோம்.
இப்போது படத்தை முடித்து ரிலீஸுக்கு காத்திருக்கிறோம்,” என்றவரிடம், ‘திரைப்படம் ஜென் சி ஆடியன்ஸுக்குப் பொருந்திப் போக வேண்டும் என விரும்பினீர்களா, அதற்காக சில விஷயங்களைக் கவனித்தீர்களா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மணிரத்னம், “இல்லை, நாங்களே ஜென் சி-தான்” என்று தக் பதிலைக் கூறினார்.
இதைத் தொடர்ந்து மணிரத்னம், “‘தக் லைஃப்’ என்ற தலைப்பைப் பரிந்துரைத்தவர் கமல் ஹாசன்தான்.
இந்தக் கதைக்கு இந்தத் தலைப்பு சரியானது என நாங்கள் உணர்ந்தோம். ‘தக் லைஃப்’ ஜென் – சிகளுக்கும் பிடிக்கும். இந்தத் திரைப்படம் ஒரு க்ரைம் உலகில் நிகழும் எமோஷனல் டிராமா.

ஆக்ஷன் காட்சிகள் படத்திலிருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு இடையே வலுவான எமோஷனும் அடங்கியிருக்கும்” என்றார்.
டைட்டில் பற்றி கமல் ஹாசன் பேசுகையில், “வெவ்வேறு தலைப்புகள் பற்றி நாங்கள் பேசி வந்தோம். இருவரும் மாறி மாறி வெவ்வேறு தலைப்புகளைப் பரிந்துரைத்தோம். இந்த ஒரு தலைப்புக்குத்தான் மணிரத்னம் ஓகே சொன்னார்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…