சென்னை; விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகையாக ரூ.97.77 கோடி நிதி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . இதை அமைச்சர் ராஜேந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார். கூட்டுறவு ற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை […]
