SwaRail App, New IRCTC Mobile App : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்கு ‘SwaRail’ என்ற புதிய டிக்கெட் முன்பதிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதைத் தவிர, ரயில் பயணங்கள் திட்டமிடல், ரயில் லைவ் லொகேஷன், PNR நிலை, உணவு ஆர்டர் செய்தல் மற்றும் பலவற்றிற்கும் இந்த செயலியை இனி ரயில் பயணிகள் பயன்படுத்தலாம். SwaRail செயலி இந்தியாவில் ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்டது.
SwaRail செயலியில் ரயில் டிக்கெட்டுகளை எவ்வாறு முன்பதிவு செய்வது?
* செயலியை பதிவிறக்கி உங்கள் IRCTC -அக்கவுண்டுக்கான login தகவல்களை பயன்படுத்தி உள்நுழையவும். IRCTC பழைய செயலியில் பயன்படுத்திய login ஐடி மற்றும் கடவுச்சொல்லை இங்கேயும் பயன்படுத்தலாம். இதுவரை IRCTC -அக்கவுண்டு இல்லாதவர்கள் புதிதாக ஓபன் செய்யவும்
* Journey Planner வரிசையில் ”, ‘Reserved’, ‘Unreserved’ and ‘Platform’ ஆகிய மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள். அதில் ‘முன்பதிவு’ என்பதைக் கிளிக் செய்துகொள்ளுங்கள்
* நீங்கள் புறப்படும் நிலையத்தின் பெயரையும், பின்னர் சேருமிடம் ரயில் நிலையத்தையும் உள்ளிட்டு, புறப்படும் தேதி, வகுப்பு போன்றவற்றை உள்ளிட வேண்டும். அதன்பிறகு ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் தோன்றும், அதில் நீங்கள் கொடுத்த தேதியின் அடிப்படையில் இயங்கும் அனைத்து ரயில்களின் பட்டியல் காண்பிக்கப்படும். உங்களுக்கு விருப்பமான ரயிலின் பெட்டியின் ரிசர்வேசன் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் மற்றொரு வலைப்பக்கம் திறக்கும்.
* இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏறும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக கோயம்புத்தூர் டூ சென்னை புக் செய்கிறீர்கள் என்றால், பீளமேட்டில் ரயிலில் ஏறுவீர்கள் என்றால் அந்த ஸ்டாப்பை கூட தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் பயணிகள் விவரத்தை கொடுக்க வேண்டும்.
* இதை முடித்து பணம் செலுத்தினீர்கள் என்றால் உங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு பின்னர் டிக்கெட் இமெயில் மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
* நெட்பேங்கிங், யுபிஐ, ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் என எந்த வகையிலும் நீங்கள் பணம் செலுத்திக் கொள்ளலாம். இதற்கு சர்வீஸ் சார்ஜ் 23 முதல் 35 ரூபாய் வரை பிடிக்கப்படும்.
* புக் செய்த டிக்கெட் செயலியிலும் இருக்கும். மை புக்கிங்ஸ் ஆப்சனில் சென்று டிக்கெட்டை மற்றவர்களுக்கும் வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து கொள்ளலாம்.
* இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவு, பணத்தை திரும்ப பெறும் கோரிக்கை, ரயில் நிகழ்நேர கண்காணிப்பு, பிளாட்பார்ம் தகவல்கள், உணவு ஆர்டர் செய்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கின்றன.