அதிரடி காட்டிய கிளாசன் – டிராவிஸ் ஹெட்! ஐபிஎல்லில் இப்படி ஒரு சாதனை!

ஐபிஎல் 205ன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறியதால் அடுத்த ஆண்டுக்கான ஒரு பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

இந்த சீசன் முழுவதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அன்னிக்கு பேட்டிங் சொதப்பலாகவே இருந்தது. ஆனால் அதனை தங்களது இறுதி போட்டியில் சரி செய்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அனைத்து பேட்டர்களும் அதிரடி காட்டினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ரன்கள் அடித்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்றிக் கிளாசின் அதிரடி காட்டினர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நான்காபுறமும் சிதறடித்தனர். ட்ராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் குவித்தார். மறுபுறம் கிளாஸன் கடைசி வரை ஆட்டமில்லாமல் 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 105 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்தது.

That 100 is a Klaas en Mass combo

Heinrich Klaasen | #PlayWithFire | #SRHvKKR | #TATAIPL2025 pic.twitter.com/uoSMHr4Z3u

— SunRisers Hyderabad (@SunRisers) May 25, 2025

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்

கடினமான இலக்கை எதிர்த்து களம் இறங்க கொல்கத்தா அணிக்கு பேட்டிங் சரியாக அமையவில்லை. சிறிது நேரம் அதிரடி காட்டினாலும் சுனில் நரேன் 31 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பிறகு குயின்டன் டி காக் 9 ரன்களும், ரகானே 15 ரன்களும், ரகுவன்சி 14 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷ் துபே ஒரே ஓவரில் ரிங்கு சிங் மற்றும் ரஸல் விக்கெட்களை வீழ்த்தினார். பெரிய இலக்கை எதிர்த்து ஆட வேண்டிய நேரத்தில் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18.4 ஓவர் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.