ஐபிஎல் 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய 5 வீரர்கள்!

ஐபிஎல் 2025 கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. லீக் போட்டிகளில் கடைசி சில ஆட்டங்கள் இந்த வாரம் நடைபெறும் நிலையில், அடுத்த வாரம் பிளே ஆப் மற்றும் பைனல் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025 எதிர்பார்த்த படி பல அணிகளுக்கு அமையவில்லை. ஐபிஎல் ஏலத்தின் முடிவில் ஒரு சில அணிகள் பலம் வாய்ந்ததாகவும், ஒரு சில அணிகள் மோசமான நிலையிலும் இருந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத் போன்ற அணிகள் தோல்வியை சந்தித்து உள்ளனர். ஐபிஎல் அணிகளை தாண்டி சில குறிப்பிட்ட வீரர்களும் இந்த ஆண்டு பெரிதாக பெர்ஃபார்ம் பண்ண வில்லை. அப்படி அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் சரியாக விளையாடாத 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

ரச்சின் ரவீந்திரா

நியூசிலாந்தின் ஓப்பனிங் வீரரான ரச்சின் ரவீந்தராவை நான்கு கோடிக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால் இந்த சீசனில் அவர் எட்டு போட்டிகளில் விளையாடி 191 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் மோசமான தோல்விக்கு இவரது பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதெல்லாம் நன்றாக விளையாடி உள்ளதோ அப்பொழுதெல்லாம் அவர்களின் ஒப்பனிங் பேட்டர்கள் நல்ல பார்மில் இருந்துள்ளனர்.

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் கடந்த சீசனில் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை ஒன்பது கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இந்த சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 105 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். டெல்லி அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததற்கு மிடில் ஆர்டரில் இவரது பேட்டிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

க்ளென் மேக்ஸ்வெல்

கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த க்ளென் மேக்ஸ்வெலை விடுவித்தது ஆர்சிபி அணி. ஆஸ்திரேலியாலின் முக்கிய ஆல்ரவுண்டான க்ளென் மேக்ஸ்வெலை ஏலத்தில் பஞ்சாப் அணி 4.20 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த சீசனில் வெறும் 48 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தற்போது காயம் காரணமாக இந்த தொடரில் இருந்தும் வெளியேறி உள்ளார். கடத்த சில ஆண்டுகளாகவே மேக்ஸ்வெல் ஐபிஎல்-ல் பெரிய பார்மில் இல்லை. அவரது மோசமான பார்ம் இந்த சீசனும் தொடர்கிறது.

முகமது ஷமி

காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமி சாம்பியன்ஸ் டிராபியில் நன்றாக பந்து வீசி இருந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அதே போல ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை. சீனியர் பந்துவீச்சாளராக இருந்தும் காயத்திற்கு பிறகு அவரால் மீண்டு வர முடியவில்லை.

ரிஷப் பந்த்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கடந்த ஆண்டு வரை டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார், ஆனால் அவரை டெல்லி அணி தக்க வைக்கவில்லை. லக்னோ அணி யாரும் எதிர்பார்க்காத விதமாக அவரை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரராக மாறினார் பந்த். ஆனால் அவரது விலைக்கு ஏற்றவாறு ஒரு போட்டியில் கூட அவர் ரன்கள் அடிக்கவில்லை. லக்னோ அணியின் கேப்டனாக இருந்து 13 போட்டிகளில் வெறும் 151 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மேலும் தனது அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு செல்லவும் தவறியுள்ளார் பந்த்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.