லண்டன்,
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஏரியில் கடந்த 1860-ம் ஆண்டு லேடி என்ஜின் என்ற நீராவிக்கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது புயலில் சிக்கி மற்றொரு கப்பல் மீது நீராவி கப்பல் மோதி ஏரியில் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்த 300 பேர் பலியாகினர்.
விபத்துக்குள்ளான அந்த பகுதியில் கப்பலின் உடைந்த பாகங்களைக் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெர்பர்ட் இங்க்ராம் என்பவரின் கைக்கெடிகாரம் 1992-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கைக்கெடிகாரம் மிச்சிகன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது 165 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கைக்கெடிகாரம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.