டேட்டாவை அள்ளி வீசும் Vi, அன்லிமிடெட் காலிங்.. அசத்தலான ரீசார்ஜ் பிளான்கள்

Vodafone Idea Truly Unlimited Rcharge Plan: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் நடக்கக்கூடிய போட்டா போட்டியில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் மிகப்பெரிய அளவில் டஃப் கொடுத்து வருகிறது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்கும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் பல புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது வோடஃபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, தற்போது தங்களின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவை அனைத்தும் “நான் ஸ்டாப் ஹீரோ” திட்டங்களாகும். இந்த ரீசார்ஜ் பிளான்களில் (Recharge Plans) சிறப்பு என்னவென்றால் இதில் பயனர்கள் அன்லிமிட்டட் டேட்டா வசதியை பெறுவார்கள். இந்நிலையில் அதிக நெட் தேவைப்படும் பயனர்களுக்கு இந்த ரீசார்ஜ் பிளான்கள் வரப்பிரசாதம் ஆகும்.

இந்நிலையில் சென்னையில் சிம் வாங்கியவர்களுக்கு இந்த பிளான் கிடைக்காது. வோடஃபோன் ஐடியா வழங்கும் “நான்-ஸ்டாப் ஹீரோ” பிளான்கள் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பல எக்கச்சக்கமான நன்மைகளை வழங்குகிறது. Vi நமது தமிழ்நாடு சர்க்கிள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 3 சூப்பரான நான்-ஸ்டாப் ஹீரோ பிளான்கள் பற்றி பார்க்கலாம். 

வோடஃபோன் ஐடியா ரூ.380 ரீசார்ஜ் திட்டம் | Vodafone Idea Rs. 380 recharge plan:
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 380 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்கள் இலவசமாக வழங்கப்படும், மேலும், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவுடன் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும். தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) பயனர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வோடஃபோன் ஐடியா ரூ.680 ரீசார்ஜ் திட்டம் | Vodafone Idea Rs. 680 recharge plan:
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 680 ரூபாய் திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD போன் கால்கள் இலவசமாக வழங்கப்படும், மேலும், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவுடன் தினமும் 100 SMS இலவசமாக கிடைக்கும். இந்த பிளானையும் தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) பயனர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வோடஃபோன் ஐடியா ரூ. 1020 ரீசார்ஜ் திட்டம் | Vodafone Idea Rs. 1020 recharge plan:
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ 1020 ரூபாய் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும், இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள் இலவசமாக வழங்கப்படும்,  பிற திட்டங்களைப் போலவே இந்த திட்டத்திலும் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா இலவசமாக வழங்கப்படும். இந்த பிளானையும் தமிழ்நாடு சர்க்கிள் (சென்னை தவிர) பயனர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.