பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண்

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழில​திபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன.

கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு, சுகா​தா​ரம், தொழில், வர்த்​தகம், பொறி​யியல், பொது விவ​காரங்​கள், குடிமைப் பணி மற்​றும் சமூக சேவை உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு ஆண்​டு​தோறும் பத்ம விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. இந்த ஆண்​டுக்​கான விருதுகள் கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்​தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்​கப்​பட்​டன.

முதல்​கட்​ட​மாக கடந்த ஏப்​ரல் 28-ம் தேதி 71 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்​கி​னார். மீதம் உள்ள 68 பேருக்கு நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடை​பெற்ற விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர், பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள் அமித்​ஷா, ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீஷ் சிங் கேகர், குமி​தினி லாகியா (மறைவு), சாரதா சின்ஹா (மறைவு) ஆகியோ​ருக்கு பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். மறைந்த பத்ம விபூஷண் விரு​தாளர்​கள் சார்​பில் குடும்​பத்​தினர் விருதுகளை பெற்​றுக் கொண்​டனர்​.

பத்ம பூஷண் விருதுதமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் பிபக் தேப்ராய், கைலாஷ் நாத் தீக்சித், ஜாலின் கோஸ்வாமி, மனோகர் ஜோஷி (மறைவு), ஆனந்த் நாக், சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

பத்மஸ்ரீ விருது: தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, எழுத்​தாளர் சீனி விஸ்​வ​நாதன், எம்​.டி. ஸ்ரீநி​வாஸ், தெருக்​கூத்து கலைஞர் புரிசை கண்​ணப்ப சம்​பந்​தன், புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசை கலைஞர் தட்​சிணா​மூர்த்தி மற்​றும் நாராயணன் (மறைவு), சாஜன் பாஜங்​கா, நீரஜா பாலி​யா, அஜய், ஹர்​சந்​திரன் சிங், பீம் சிங், செலான் ஏக்​நாத், விலாஸ் கஜனன்​ராவ், மகாவீர் நாயக், சோனியா நில்​யானந்த், அசூல் ராமச்​சந்​திர பாலவ், வி.ஆர்​.பஞ்​ச​முகி, லாவ்​ஜி​பாய், சுவாமி பிர​திபிலானந்​தா, பிர​சாந்த் பிர​காஷ், நாகேந்​திர​நாத் ராய், அசோக் லஷ்மண் சரப், அரவிந்த் சர்​மா, அசுதோஷ் சர்​மா, சுபாஷ் கெலுலால் சர்​மா, ஹர்​விந்​தர் சிங், சந்​திர​காந்த் சோம்​பு​ரா, வெங்​கப்பா அம்​பாஜி சுகலேகர், கேரளாவை சேர்ந்த கால்​பந்து விளை​யாட்டு வீரரும் நடிகரு​மான விஜயன், ஆகியோ​ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார்.

அமெரிக்கவாழ் தமிழர்: சென்னையை பூர்விகமாக கொண்ட சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் அறக்கட்டளை தலைவராக பணியாற்றி வருகிறார். குடியரசுத் தலைவர் முர்முவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றுக் கொண் டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.