மும்பையில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளது. பருவமழை துவங்கும் போதே அதிகனமழையுடன் துவங்கியுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக நகரின் பல இடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதுகுறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளருமான விவேக் அக்னிஹோத்ரி “இந்தியாவில் நகரமயமாக்கல் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக” விமர்சித்துள்ளார். மும்பையின் […]
