திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு: முதல்வர், துணை முதல்வருக்கு திரைத்துறையினர் நன்றி

சென்னை: ​திரைப்​படங்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களால் வசூலிக்​கப்​படும் கேளிக்கை வரி 4 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் திரைப்​படங்​களுக்கு உள்​ளாட்சி அமைப்​பு​களால் 8 சதவீத கேளிக்கை வரி வசூலிக்​கப்​பட்டு வந்​தது. இந்த வரியைக் குறைக்க வேண்​டும் என்று திரைப்பட அமைப்​பு​கள், தமிழக அரசிடம் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தன.குறிப்​பாக, சிறிய பட்​ஜெட் திரைப்​படங்​கள் இந்த வரி​யால் பாதிக்​கப்​படு​வ​தாகத் தயாரிப்​பாளர்​கள் கூறிவந்​தனர்.

இந்​நிலை​யில், இந்​தக் கோரிக்​கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, உள்​ளாட்சி அமைப்​பின் கேளிக்கை வரியை குறைத்து அரசாணை வெளி​யிட்​டு உள்​ளது. அதன்​படி, இந்த வரி 8 சதவீதத்​தில் இருந்து 4 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக தமிழக முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி உள்​ளிட்​டோருக்கு திரைப்​படத் துறை​யினர் நன்றி தெரி​வித்​து உள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.