மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38).
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார். கபில் துலேயில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்திருந்தார்.
அங்குப் படிக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

கபிலின் கல்லூரி கால காதலி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கபில் தனது முன்னாள் காதலியைச் சந்தித்தார்.
அதன் பிறகு அவர்களுக்குள் பழைய காதல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது உறவை வளர்த்துக்கொண்டனர்.
இவர்களின் காதல் விவகாரம் கபில் மனைவி பூஜாவிற்குத் தெரிய வந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து மனைவி பூஜாவைக் கொலை செய்ய முடிவு செய்த கபில், அதற்காகத் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து திட்டம் தீட்டினார்.
வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஊசியில் அடைத்து அதனைத் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்தினார்.
முதலில் பூஜாவைக் கீழே தள்ளினர். உறவினர்கள் பூஜாவின் கை மற்றும் காலைப் பிடித்துக்கொண்டனர். உடனே கபில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊசி மூலம் பூஜாவிற்குச் செலுத்தினார். பின்னர் பூஜா சாகும் வரை கபில் அருகிலே இருந்தார்.
ஒன்றரை மணி நேரம் கழித்து பூஜா இறந்த பிறகு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

பூஜாவைப் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கபில் தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தார்.
இது குறித்து பூஜாவின் சகோதரர் பூசன் மகாஜனுக்கும் கபில் போனில் தகவல் கொடுத்தார். மகாஜன் உறவினர்களோடு வந்து போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து பூஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக கபில், அவரது சகோதரி மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY