iPhone 15 Discount Offer: நீண்ட காலமாக ஐபோன் 15 வாங்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இப்போது உங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு வந்துவிட்டது. ஐபோன் 15 விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் இப்போது முன் எப்போதும் இல்லாத அளவு மலிவான விலையில் கிடைக்கிறது.
ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பியவர்களுக்கும், அதிக விலை காரணமாக தயக்கம் காட்டியவர்களுக்கும் இப்போது இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்க்கும். iPhone 15 போனில் கிடைக்கும் சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐபோன் 15 விலையில் அதிரடி வீழ்ச்சி
ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் கருப்பு நிறத்தில் வரும் ஐபோன் 15 இன் 128 ஜிபி மாறுபாட்டின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இப்போது இதை நல்ல தள்ளுபடியில் வாங்கலாம். இதன் விலை ரூ.69,900. ஆனால், இந்த நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன் 15% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.59,700 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,200 நேரடி சேமிப்பு கிடைக்கிறது. ஆனால், இதில் கிடைகும் தள்ளுபடி இது மட்டுமே இல்லை.
இந்த போனில் இன்னும் சில சலுகைகளும் கிடைக்கின்றன. அவற்றை பற்றிங்கே காணலாம்.
iPhone 15 Exchange Offer and Bank Discount: பரிமாற்ற சலுகை மற்றும் வங்கி தள்ளுபடி
நீங்கள் அதிகமாக சேமிக்க விரும்பினால், உங்கள் பழைய தொலைபேசியையும் மாற்றிக்கொண்டு இதை வாங்கலாம். இந்த போனில் ரூ.52,550 என்ற சிறந்த பரிமாற்ற சலுகை கிடைக்கிறது. இது அதன் விலையை மேலும் குறைக்கும். இருப்பினும், பரிமாற்ற மதிப்பு பரிமாற்றம் செய்யப்படும் தொலைபேசியின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தொலைபேசியின் விவரங்களை உள்ளிட்டு பரிமாற்ற மதிப்பைச் சரிபார்க்க வேண்டும். இது தவிர, Amazon Pay ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், வாடிக்கையாளர்கள் கேஷ்பேக்கையும் பெறுவார்கள்.
iPhone 15 இன் அம்சங்கள்
டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பு – iPhone 15 6.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆப்பிள் முந்தைய மாடல்களைப் போலவே அதே வடிவமைப்பை இதிலும் காண முடிகின்றது. ஆனால் இது ஒரு டைனமிக் ஐலேண்ட் நாட்ச்சைக் கொண்டுள்ளது, இது iPhone 14 Pro மாடல்களில் நன்கு விரும்பப்பட்டது.
கேமரா அப்கிரேட் – இந்த மாடலில் 48-மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் உள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது பகல் வெளிச்சம், குறைந்த ஒளி மற்றும் போட்ரெய்ட் போட்டோகிராபியில் பெரிய அளவிலான மேம்பாடுகளை அளிக்கின்றது.
பிராசசர் – இது ஆப்பிளின் A16 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. இது iPhone 14 மற்றும் iPhone 14 Plus இல் பயன்படுத்தப்படும் A15 சிப்பை விட சிறந்தது.
சார்ஜிங் போர்ட் – ஐபோன் 15 இல் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது தனிச்சிறப்பு வாய்ந்தது. இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட லைட்னிங் போர்ட்டை மாற்றியுள்ளது.