`கும்பகோணம் கோஸ்து, குஜராத்தி தோக்லா..!' – வைரலாகும் ஐசரி.கே.கணேஷின் இல்ல திருமண விழாவின் மெனு!

வேல்ஸ் குழுமத்தின் தலைவர் ஐசரி கே. கணேஷின் மகள் ப்ரீத்தா கணேஷுக்கும் லஷ்வின் குமார் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. ரஜினி, கமல், கார்த்தி, ரவி மோகன், ஜீவா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் இந்தத் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத் தாண்டி, துர்கா ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, நாதக-வின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். Vels Wedding இன்று திருவான்மியூரிலுள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. நாளை … Read more

முதல்வர் திறந்து வைத்த திருச்சி கலைஞர் பேருந்து முனையம்

திருச்சி இன்று திருச்சியில் உள்ள கலைஞர் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்ம்m திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.  முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்ததுடன், பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் முன்பு கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், “இது பஞ்சப்பூர் அல்ல.. எல்லா ஊரையும் மிஞ்சப்போகும் மிஞ்சும்பூர். … Read more

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானின் மேற்கு மாகணமான பலுசிஸ்தானில் மூன்று கிளர்ச்சியாளர் குழுக்கள், குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. பலுசிஸ்தான் படைகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான மோதல்களுடன் ‘சுதந்திர பலுசிஸ்தான்’ என்ற கோஷமும் அதிகரித்து வருகிறது. பலுசிஸ்தான் கொடி சில இடங்களில் பாகிஸ்தான் கொடியை இறக்கி பலுசிஸ்தான் கொடியை … Read more

இந்தியா – பாக். பதற்றம்: குடியரசுத் தலைவரின் சபரிமலை பயணம் தள்ளிவைப்பு 

தேனி: இந்திய எல்லையில் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வருவதாக இருந்த குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடைபெறும். இந்நிலையில் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதிமுர்மு சபரிமலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 18,19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. மேலும் … Read more

“வீதிக்கு வராமல் வீட்டிலேயே இருங்கள்” – காஷ்மீர் மக்களுக்கு உமர் அப்துல்லா வேண்டுகோள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரை சுற்றியுள்ள மக்கள் வீதிகளில் இறங்குவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இப்போது ஜம்மு இருளில் மூழ்கியுள்ளது. நகர் முழுக்க சைரன் ஒலிகளை கேட்கமுடிகிறது. குண்டுவெடிப்பு மற்றும் கனரக பீரங்கித் தாக்குதல்களின் சத்தங்கள் விட்டுவிட்டு கேட்கின்றன. ஜம்மு மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து தெருக்களில் இறங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருங்கள். அடுத்த … Read more

தொடரும் போர் பதற்றம்: பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Simran: `30 வருட கரியரில் இதுதான் சிறந்த தருணம்; அஜித், விஜய்க்கு என்னுடைய..'- நெகிழும் சிம்ரன்

சிம்ரன் சமீபத்தில் வெளியான ‘அஜித்தின் குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த மே1 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தில் சிம்ரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.   டூரிஸ்ட் ஃபேமிலி ‘அப்போது டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் வெற்றியை  எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,  இந்தப் படம் வெற்றி அடைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஃபேமிலி … Read more

நாளை ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடக்கம

ஐதராபாத் நாளை ஐதர்பாட்தில் 72 ஆவது உலக அழகி போட்டி தொடங்குகிறது. இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் இந்த ஆண்டுக்கான ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி மே 10-ந்தேதி(நாளை) தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  கடந்த 2024 உலக அழகி போட்டி மும்பையில் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில்ல் கலந்து கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த 115 … Read more

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந்துள்ளது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை சைரன்களை ஒலித்து, வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். #WATCH | J&K | Red streaks seen and explosions can be heard as India’s air defence intercepts Pakistani drones amid blackout in Rajouri (Visuals deferred by an … Read more

“நெல்லை நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி: “திருநெல்வேலியில் அமைக்கப்படும் நூலகத்துக்கு காயித மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னைப் பல்கலைக் கழகத்தில், இசுலாமிய தமிழ் இலக்கிய ஆய்வு இருக்கை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் எடுக்கப்படும்” என்று திருச்சியில் நடந்த உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 9) திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு தொடக்க விழாவில் பேசியது: “கடந்த … Read more