Retro Review: காதலுக்காக கத்தியைக் கீழே போடும் அதே `ரெட்ரோ' தமிழ் சினிமா டெம்ப்ளேட்; க்ளிக்காகிறதா?

தனது காதலி ருக்மணி (பூஜா ஹெக்டே) மீது கொண்ட காதலால் தனது கோபத்தையும், ரவுடித்தனத்தையும் விட்டுவிட்டு அவரைத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பாரிவேல் கண்ணன் (சூர்யா). இதனிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவுக்குக் கடத்தப்பட்ட ஒரு பொருள் (‘கோல்ட் ஃபிஷ்’) காணாமல் போனதாகத் தகவல் வருகிறது. இதைத் தேடி, பாரியின் வளர்ப்புத் தந்தையான ஜோஜு ஜார்ஜ், திருமண விழாவுக்கு வருகிறார். அங்கு நடக்கும் மோதலில் பாரி மீண்டும் கத்தியைக் கையில் எடுக்க, ருக்மணி அவரை விட்டுப் பிரிகிறார். … Read more

அமேசான் வழங்கும் சம்மர் ஆஃபர்… ஏசி முதல் டிவி வரை… பாதி விலையில் வாங்கலாம்

அமேசானின் கிரேட் சம்மர் சேல் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இந்த சலுகை விற்பனையில், மின்னணு பொருட்களுக்கு, குறிப்பாக ஏசி, குளிர்சாதன பெட்டி, டிவி மற்றும் கூலர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் ஏர் கண்டிஷனர்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை 75% வரை தள்ளுபடியில் வாங்கலாம். ஹேயர், லாயிட் மற்றும் சாம்சங் போன்ற பிரபல நிறுவனங்களின் ஏசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் சிறந்த சலுகைகள் … Read more

இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புப் பொதுத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வுகள் நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் … Read more

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், ‘பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படுகிறதா?’ என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இப்போது திருச்சி மாவட்டத்தில் கிட்டதட்ட 104 டிகிரி வந்துவிட்டது. இப்போதைக்குப் பள்ளி திறப்பு ஜூன் 2-ம் தேதி என்று அறிவித்து உள்ளோம். கோடை வெயில் அந்த சமயத்தில் … Read more

கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி மே 6-ல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025-ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களுக்கு ஆட்தேர்வு செய்யப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி கொண்ட மனுதாரர்கள் … Read more

இந்தியாவில் 17 பெண் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்

புதுடெல்லி: நாட்டில் உள்ள 513 பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்களில் 512 பேர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏடிஆர் என்ற தேர்தல் உரிமைகள் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: மக்களவையில் உள்ள 75 பெண் எம்.பி.க்களில் 6 பேரும், மாநிலங்களவையில் உள்ள 37 பெண் எம்.பி.க்களில் 3 பேரும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 400 பெண் எம்எல்ஏ.க்களில் 8 பேரும் கோடீஸ்வரிகள். ஆந்திராவில் அதிகபட்சமாக 24 பெண் எம்எல்ஏ.க்கள் கோடீஸ்வரர்களாக … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இட ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் வருமா?

Caste Census: சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இதை நடத்துவதால் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

Retro Movie Review | சூர்யாவின் ரெட்ரோ படம் எப்படி இருக்கு? இதோ திரை விமர்சனம்!

Retro Movie Review in Tamil: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெட்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பார்வையாளர்களை இந்த படம் கவர்ந்ததா? ரெட்ரோ படம் எப்படி இருக்கிறது? இதோ உங்களுக்காக ரெட்ரோ படத்தின் திரை விமர்சனம்.

TVK: விஜய் திடீர் செய்தியாளர் சந்திப்பு… என்ன பேசினார் தெரியுமா?

TVK Vijay Press Meet: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு நடிகரும், அதன் தலைவருமான விஜய் முதல்முறையாக செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

IPL 2025 : டெல்லியின் கனவில் மண் அள்ளி போட்ட கேகேஆர் – அக்சர் படேல் புலம்பல்

IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆப் வாய்ப்பை தக்க வைப்பது யார், ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிஎஸ்கே அணி முதல் அணியாக பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு நூலிழை வாய்ப்பு மட்டுமே இருக்கின்றன. இனி வரும் ஒரு போட்டியில் கூட அந்த அணிகள் தோற்கவே கூடாது. அப்படி தோற்கும் … Read more