மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கேஸ்பர் ரூட் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான ரஷிய வீரர் டேனியல் மெத்வடேவ் – கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3,7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார். 1 More … Read more

பஹல்காம் தாக்குதல்;விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன், கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானியருக்கான விசா ரத்து, அட்டாரி எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முப்படை ஆலோசகர்கள் பதவியிடங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அதை போராக கருதுவோம் என பாகிஸ்தான் … Read more

பதிவுத்துறை வரலாற்றில் ஒரே நாளில் ரூ.272 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல்

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏப்.30-ம் தேதி ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மங்களகரமான நாளான ஏப்.30-ம் தேதி புதன்கிழமை அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதை ஏற்று, கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த பிப். 10-ம் தேதி ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேச துரோகம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா, ‘பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோகம்’ என தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது 30 வயதான நபர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பியதாக கூறப்படுகிறது. அவரை 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 20 பேரை … Read more

ஜிஎஸ்டி வருவாய் வசூலில் புதிய உச்சம்: ஏப். மாதம் ரூ.2.37 லட்சம் கோடி வசூல்

புதுடெல்லி, நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஏப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி உள்ளது. 2017-ல் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து அதுவே அதிகபட்சமாகும். இது கடந்த ஆண்டு ஏப்., மாதம் வசூலான 2.10 லட்சம் கோடி ரூபாயை காட்டிலும் 12.6 சதவீதம் … Read more

ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை

ஜெருசலேம், ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீ காரணமாக பல கிராமங்கள் அபாயத்தில் உள்ளன. ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலில், 10 ஆண்டுகளில் மிக மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது. … Read more

ரயில்வே காவல்துறையின் பெண் பயணிகள் பாதுகாப்பு குழு: தமிழகம் முழுவதும் உறுப்பினர்களாக இணைந்த 3,000 பெண்கள்

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக ரயில்வே காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட பெண் பயணிகள் பாதுகாப்பு குழுவில் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 பெண் பயணிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோவை ஆகிய நிலையங்களில் இருந்து தலா 100 பெண் பயணிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். கோவை – திருப்பதிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிட்ட சம்பவம், … Read more

''மனிதநேயத்துக்கு எதிரான போக்குகளிலிருந்து இளம் தலைமுறையினரை நாம் காப்பாற்ற வேண்டும்'': பிரதமர் மோடி

மும்பை: மனிதநேயத்துக்கு எதிரான போக்குகளிலிருந்து இளம் தலைமுறையினரை நாம் காப்பாற்ற வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாள். அனைத்து மராத்தி சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இன்றைய … Read more

உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையா? உடனே அழையுங்கள்….

சென்னை: சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு 044-4567 4567 அல்லது1961 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம் மேலும் மாநகராட்சிகள் வழங்கப்பட்ட நம்ம சென்னை செயலி மூலம் புகார் அளிக்கலாம்  என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்  கோடை வெயில் கொழுத்த தொடங்கி உள்ள நிலையில்,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு மமளமளவென சரிந்து வருகிறது. சில இடங்களில் குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் குடம் தண்ணீர் … Read more