திருவோணம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்து வந்ததுள்ளனர். இந்நிலையில், முகமது ரியாஸ் … Read more

ஆப்கனிலிருந்து உலர் பழங்கள் ஏற்றி வந்த 160 லாரிகளுக்கு அனுமதி வழங்கியது இந்தியா

உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான ஒருவழி வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி, ஆப்கனிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை தரைவழியாக இணைக்கும் முக்கியமான அட்டாரி-வாஹா … Read more

தமிழகத்தில் மின்கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு: ஜூலை முதல் அமலுக்கு வரும் என தகவல்

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தைக் கையாளும் மின் வாரியத்தின் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதனால் 2022-ல் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மேலும், 2026-27 வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, … Read more

கர்நாடக சாலையில் பாகிஸ்தான் கொடி கட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குந்தாப்பூர் சாலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. சாலையோரத்தில் பழுதாக நின்ற வாகனத்திலும் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் அங்கு பஜ்ரங் தள், ஹனுமன் சேனா ஆகிய அமைப்பினர் குவிந்ததால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பஜ்ரங் தள் நிர்வாகி சச்சின் குமார் அளித்த புகாரின்பேரில் குந்தாப்புரா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மர்ம நபர்கள் மீது 2 பிரிவுகளில் போலீஸார் … Read more

ரிஷப் பண்ட் லக்னோவில் இருந்து நீக்கம்? அதிருப்தியில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் அடுத்த பாதையில் கடுமையாக சொதப்பி வருகிறது. முதல் 6 போட்டிகளில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி  4 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்றது.  அந்த அணிக்கு இந்த ஆண்டு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் … Read more

DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' – டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்

‘குஜராத் வெற்றி!’ டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின் பெரிய பலமே இந்தப் போட்டியிலும், அது மேலும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. DC vs GT டெல்லி அணி முதலில் பேட் செய்து 199 ரன்களை எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் க்ளாஸாக ஆடி 60 பந்துகளில் சதத்தை நிறைவு செய்திருந்தார். அவரின் ஆட்டத்தால்தான் டெல்லி … Read more

நடுவானில் ஏற்பட்ட கோளாறால் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி: என்ன நடந்தது?

நடுவானில் பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டின் பிஎஸ்-3 இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், இஓஎஸ்-09 செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட பல்வேறு செயற்கைக் கோள்கள் தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு, எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் … Read more

கிரிப்டோகரன்சி மோசடி: பேஸ்புக் நண்பரிடம் ரூ.79 லட்சத்தை இழந்த 53 வயது பெண்

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகானில் வசித்து வரும் 53 வயதான பெண்ணிடம் ஜூபர் ஷம்ஷாத் கான் என்பவர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பரானார். அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கிப் பழகிய அவர், கிரிப்டோகரன்சி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி வந்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும், ஒரு … Read more

"தோனி ஒரு தேசத்துரோகி".. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. பின்னணி என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டனாக இருந்து வருகிறார் எம் எஸ் தோனி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் எம் எஸ் தோனிக்கு எதிராக ஹேஷ்டேக் ஒன்று இரண்டாகி வருகிறது. Same on deshdrohi Dhoni என்ற ஹேஷ்டாக் டிரண்ட் ஆகி வருகிறது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான  ஹர்பஜன் சிங், இந்தியா கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களை ஒப்பிட்டு பேசினார். … Read more