துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதி தடை: ஆசாத்பூர் மண்டி முடிவு

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களில் பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களை துருக்கி வழங்கியது. மேலும், அஜர்பைஜான் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்துள்ளது. எனவே, இந்த இரண்டு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் ஆசியாவின் மிகப்பெரிய பழம் மற்றும் காய்கறி சந்தையான வடக்கு டெல்லியின் ஆசாத்பூர் மண்டி, துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலம் புனே-வைச் … Read more

“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்” – நயினார் நாகேந்திரன்

மதுரை: “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த … Read more

காஷ்மீர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்: இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரின் கேலர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக … Read more

அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாக். வெளியுறவு அமைச்சர் விருப்பம்

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை அவசியம். பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து … Read more

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த … Read more

DD Next level Review: படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ரிவியூவர்! திரைக்கதை நெக்ஸ்ட் லெவலா ஏமாற்றமா?

‘கிஸ்ஸா 47’ என்ற யூடியூப் சேனலில் திரைப்பட விமர்சனம் செய்கிறார் கிருஷ்ணா (சந்தானம்). அவருக்கு இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) என்பவரிடமிருந்து குடும்பத்துடன் அவரது படத்தைக் காண வருமாறு சிறப்பு அழைப்பு வருகிறது. அதன் பிறகுதான் திரைப்பட விமர்சகர்களைத் தேடிக் கொல்லும் விநோதமான பேயாக ஹிட்ச்காக் இருதயராஜ் இருப்பது தெரியவருகிறது. அப்படி ஒரு விமர்சகரான கிருஷ்ணாவைப் பழிவாங்க, திரையரங்கில் ஓடும் திரைப்படத்துக்குள்ளேயே ஒரு பாத்திரமாக அனுப்பிவிடுகிறார் இருதயராஜ். அங்கு, அவரது குடும்பத்தினர் திரைப்படக் கதாபாத்திரங்களாகச் சிக்கியிருப்பதையும், காதலி … Read more

முதிய பயணி ஒருவரை வண்ட;லூரில்  தாக்கிய ஓட்டிநர், நடத்துனர் பணியிடை நீக்கம்

சென்னை முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது முதிர்ந்த பயணி ஒருவர் ஏறி உள்ளார்.  அந்த வயது முதிர்ந்த பயணி யை ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வண்டலூரில் முதியோருக்கான பாஸ் எடுத்து, பஸ்சில் ஏறியுள்ளார்.  அவரை முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என நடத்துநர் கூறியதால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முடிவில் … Read more

இறந்த தாயின் வெள்ளி கொலுசைக் கேட்டு, தகனத்தை தடுத்து நிறுத்திய மகன்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானில் ஒரு மகன் வெள்ளி வளையலுக்காக தனது தாயாரின் சிதையில் ஏறி படுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்தவர் புரி தேவி. இவருக்கு 7 மகன்கள் இருக்கின்றனர். இதில் 6 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். ஓம்பிரகாஷ் என்ற மகன் மட்டும் கிராமத்திற்கு வெளியில் தனியாக வசித்து வந்தார். அவருக்கும் மற்ற சகோதரர்களுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் புரி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து … Read more

கிழித்து வீசப்பட்ட ஆவணங்கள்; டாஸ்மாக் நிர்வாக இயக்குநரிடம் 6 மணி நேரம் அமலாக்​கத் துறை​ விசாரணை – பின்னணி என்ன?

சென்னை: டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலை​யில் கிடந்த சில ஆவணங்​களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் … Read more

சத்தீஸ்கரில் முதல் முறையாக மின்சார வசதி பெற்ற நக்சல் பாதித்த 17 கிராமங்கள்!

ராய்பூர்: சத்தீஸ்கரிஸ் நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் – சவுகி மாவட்டத்தில் எளிதில் செல்லமுடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் இருக்கும் 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியமந்திரி மஜ்ரதோலா விக்யுதிகரன் யோஜனா-வின் கீழ், ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார வசதிகள் மூலமாக 540 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடினமான நிலப்பரப்பு, நக்சல் பாதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வது பெரும் … Read more