ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக வழக்கு: மாணவர்கள் நலனை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை -​ தமிழக அரசு வாதம்

நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்கேஜி,யூகேஜி விண்ணப்பம் அளிக்க முடியாத … Read more

சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகள்: மேற்கு வங்கத்தில் இருவர் கைது

கொல்கத்தா: சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளைப் பகிர்ந்த காரணத்துக்காக மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா பர்தாமானில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் பர்தாமான் மாவட்டத்தை சேர்ந்த ஷாருக் ஷேக் மற்றும் நூர் முகமது ஷேக் ஆகிய இருவரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் பதிவுகளை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, … Read more

‘இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை’ : ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் டிரம்ப் பேச்சு

இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் தயாரிப்புகள் அதிகளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் உற்பத்தி திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தோஹாவில் நடந்த ஒரு நிகழ்வில் டிரம்ப் டிம் குக்கிடம், நீங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் எங்களுக்கு ஆர்வம் … Read more

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு! * பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா! * The Resistance Front – ஐ.நா-வில் இந்தியா முறையீடு? * பாகிஸ்தானுக்கு 8,700 கோடி IMF விடுவிப்பு? * Turkey & Azerbaijan: நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் இந்திய மக்கள்? * உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாகச் சோதனை? * காங்கிரஸ் கேள்விக்கு பாஜக பதில்? … Read more

சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 7 செ.மீ., காரைக்காலில் … Read more

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன?

புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, … Read more

குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் கண்டனம்

சென்னை குடியசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக் முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார். இதையொட்டி தமிழக் முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் … Read more

மதுராந்தகம் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றம்!

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அணுகு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 14 கடைகளை நகராட்சி ஆணையர் அபர்ணா தலைமையிலான பணியாளர்கள், போலீஸார் துணையுடன் இடித்து அகற்றினர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரப் பகுதியில் பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை அகற்றி, புதிதாக அப்பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு … Read more

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி … Read more