பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம்: திருமாவளவன் திட்டவட்டம்

திருச்சி: பாஜக, பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்தியா-பாகிஸ்தான் இடையோன போர் நிறுத்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது புரியாத புதிராக இருக்கிறது. அதேநேரம், போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு … Read more

போர்க்களங்களில் வீரர்களின் உயிரிழப்பை தடுக்க ரோபோ வீரர்களை தயாரிக்க டிஆர்டிஓ தீவிரம்

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே​வில் உள்ள டிஆர்​டிஓ அமைப்​பின் பொறி​யியல் பிரிவு தலை​வர் டலோலி கூறிய​தாவது: போர்க்​களம் மற்​றும் ராணுவ நடவடிக்​கை​களின்​போது வீரர்​களின் உயி​ரிழப்பை தடுக்க ரோபோக்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதற்​காக மனிதர்​களை போன்ற ரோபோ வீரர்​களை தயார் செய்​யும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறோம். கடந்த 4 ஆண்​டு​களாக மாதிரி ரோபோக்​களை தயார் செய்​திருக்​கிறோம். இந்த ரோபோக்​கள் கடின​மான மலைப்​பகு​தி​களில் எளி​தாக ஏறிச் செல்​லும். நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்று செயல்பட ரோபோக்​களில் புதிய தொழில்​நுட்​பங்​களை … Read more

இலங்கை பள்ளத்தாக்கில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினரும் மீட்புப் … Read more

உள் இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம்: சித்​திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: வன்னியர்களக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி இதுவரை இல்லாத வகையில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக மற்​றும் வன்​னியர் சங்​கத்​தின் சார்​பில் மாமல்​லபுரம் அருகே திரு​விடந்​தை​யில் `சித்​திரை முழுநிலவு வன்​னிய இளைஞர் பெரு​விழா மாநாடு’ நேற்று மாலை நடை​பெற்​றது. 12 ஆண்​டு​களுக்கு பிறகு மாநாடு நடை​பெறு​வ​தால் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்து ஏராள​மானோர் பங்​கேற்​றனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலைமை தாங்கி மாநாட்டு மலரை வெளி​யிட்​டார். பாமக தலை​வர் அன்​புமணி, … Read more

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக … Read more

தமிழக முதல்வரின் அன்னையர் தின வாழ்த்து

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் வருடத்தின் 365 நாட்களும் ஏதோ ஒரு முக்கிய நாளை நாம் கொண்டாடிக் கொண்டு அல்லது நினைவு கூறுகிறோம். அவ்வரிசையில் இன்று, சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் … Read more

தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும்: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி 

மதுரை: 90 சதவீத நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரையில் வலியுறுத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 22ல் காஷ்மீர் பஹல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் காஷ்மீரில் பயிற்சி பெற்றிருப்பது தெரிகிறது. மும்பை தாக்குதலிலும் ஈடுபட்ட தீவிரவாதிகள் மகாராஷ்டிராவில் பயிற்சி பெற்றுள்ளனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் 100 தீவிரவாதிகள், 40 பாக். வீரர்கள் உயிரிழப்பு: இந்திய படையினர் 5 பேர் வீரமரணம்

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: டிஜிஎம்ஓ ராஜீவ் கய்: … Read more

இன்று மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம். ”தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் … Read more