இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்! இந்தியர்களின் மனநிலை என்ன?
India Pakistan War Stopped Indian Citizens Reaction : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகி வந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
India Pakistan War Stopped Indian Citizens Reaction : இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகி வந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறது.
சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம், “வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் கலைஞர் ஆட்சியில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். கலைஞர் வருமுன் காப்போம் என்ற பெயர் மாற்றம் இந்த ஆட்சியில் தான் நடைபெற்றது. ஒவ்வொரு மாநகராட்சிகளில் நான்கு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. சென்னையில் 14 மண்டலங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. … Read more
புதுச்சேரி: சித்திரை முழுநிலவு வன்னியர் சங்க மாநாடு நாளை (மே 11) மாமல்லபுரம் அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி வழியாக வருவோர் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி கலால்துறை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி … Read more
இந்திய விமானப்படை தளங்கள், எஸ்-400 ஏவுகணை யூனிட் இருக்கும் தளம் ஆகியவற்றை அழித்தாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் பொய் தகவல்களை கூறி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிர்சா மற்றும் சூரத் விமானப்படை தளங்கள், ஆதம்பூரில் உள்ள எஸ்-400 … Read more
India Pakistan Ceasefire: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு பின் முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். இந்தியாவ்ய்ம் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த … Read more
தமிழக அரசின் உதவியால் பஞ்சாபில் சிக்கி தவித்த 13 கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை திரும்பினர். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டதால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்க சென்ற 9 மாணவர்கள், 4 மாணவிகள் தமிழக அரசு உதவியுடன் நேற்று இரவு டெல்லி அழைத்துவரப்பட்டனர். டெல்லியில் இருந்து மாணவர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை அயலகத் தமிழர் நலத்துறை … Read more
ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரித் மற்றும் சக்லாலா விமானப்படை தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து இந்திய போர் விமானங்கள் நேற்று காலை குண்டு வீசன. இது குறித்து விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை … Read more
போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மே 10 சனிக்கிழமையன்று, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற இந்திய மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் மீண்டும் பிளாக் அவுட் அமல் படுத்தப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அந்த உத்தரவின்படி, மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என … Read more