100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை:  100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி,  மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதன்படி,  4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் வாசிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 234/77 என்னும் திட்டத்தின் கீழ், இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநிலம் … Read more

மும்பை: 7 வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்ற கார் – சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை அருகே முலுந்த் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடி அருகே இருந்த இரும்பு கம்பத்தின் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அவரிடம் காரை நிறுத்துமாறு போலீசார் கூறினர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து காரை எடுத்துக் … Read more

ஐ.சி.சி. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பட்டியல் வெளியீடு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஜிம்பாப்வேயின் பிளெசிங் முசரபானி, வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ், நியூசிலாந்தின் பென் சியர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த … Read more

'எல்லையில் இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும்' – பாகிஸ்தான் ராணுவ மந்திரி எச்சரிக்கை

இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் மீண்டும் கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி குவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என தெரிவித்தார். அரசியல் ஆதாயத்துக்காக இந்த பிராந்தியத்தை … Read more

'மாபெரும் வீரன்; தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தலைவணங்குகிறேன்' – நயினார் நாகேந்திரன்

‘சமீபத்தில் காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதைக்கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பில் எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில தலைவர் நயினார், தேசிய செயற்குழு உறுப்பினர் தமிழிசை, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. பாஜக ஆர்ப்பாட்டம் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் நயினார், “வங்கதேசத்தைப் பிரித்துக் … Read more

வணிகர்களின் நலனை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி

மறைமலை நகர்: வணி​கர்​கள் நலனை பாது​காக்க அதி​முக உறு​துணை​யாக இருக்​கும் என்று கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். தமிழ்​நாடு அனைத்து வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்​பின் சார்​பில் 42வது வணி​கர் தினம் மற்​றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகு​தி​யில் நடை​பெற்​றது. இதில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சிறப்பு அழைப்​பாள​ராக பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணி​கர்​கள் நலனில் அதிக அக்​கறை கொண்​ட​வர்​கள். சில்​லரை வணி​கத்​தில் அந்​நிய முதலீடு என்று வந்​த​போது மக்​களவை​யில் … Read more

ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா திட்டம்?

புதுடெல்லி: ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா படிப்படியாக துண்டித்து வருகிறது. சிந்து … Read more

பாகிஸ்தான் ராணுவம் 2-ம் முறையாக ஏவுகணை பரிசோதனை

இந்தியாவுடன் பதற்றம் நிலவும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 2-வது முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கினர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில், … Read more

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி நீட் விலக்கு பெற்று தருவாரா? ஆ. ராஜா கேள்வி!

 இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என ஜெயலலிதா சொன்னாரே — அதை மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிடம் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு பெற்றுத் தருவாரா? என்று ஆ. ராஜா கேள்வி.

Retro: 'ரெட்ரோ' படத்துக்கு 15 நாள் ரூம் போட்டு ரெடி ஆனேன்! – 'மைக்கேல் மிராஸ்' விது பேட்டி

மீண்டும் நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார் நடிகர் விது. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் ஷட்டானி கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தியவர் இப்போது ‘ரெட்ரோ’ படத்தில் மைக்கேல் மிராஸாக களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார். படத்தில் இவருடைய சிரிப்புதான் வில்லனிசத்தின் பீக் மொமன்ட்! ‘ரெட்ரோ’ தொடர்பாக பல விஷயங்களைப் பேசுவதற்கு இவரைச் சந்தித்தோம். அதே சிரிப்போடு நிகழ்ந்த இந்த உரையாடல் ஷட்டானி கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கம், சூர்யாவுடனான நட்பு என பல பக்கங்களைப் புரட்டின. Actor Vidhu Interview … Read more