தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு

டெல்லி தமிழக முதல்வருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் ர் 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதன்படி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9.30 மணி அளவில் … Read more

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' – எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று நேற்று முன்தினம் வந்துள்ளது. வேலுமணி வீடு அதில், “ஜூலை 30 ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். நாங்கள் உங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் உள்ளனர். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். காவல்துறையிலும் எங்கள் ஆள்கள் பணியாற்றுகிறார்கள். உங்களிடம் நிறைய … Read more

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று இல்லை: ​மக்​கள் அச்சப்பட தேவையில்லை – சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவி வருகிறது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் அறிகுறிகளின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதத்தில் தொற்றுக்கு … Read more

டெல்லியில் இடியுடன் மழை; கோவாவுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: புதுடெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், கோவாவுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், ராஜஸ்தானுக்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி அகில் ஸ்ரீவஸ்தவா, “டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் லேசானது முதல் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 … Read more

தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் – வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்! 

டாக்கா: வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டுவதற்கான ஒரு சூழ்ச்சியாக யூனுஸின் ராஜினாமா வதந்தி பார்க்கப்படுகிறது. வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் தலைமையிலான போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறி, ஆகஸ்ட் … Read more

Ace Review: மலேசியாவில் ரகளை செய்யும் விஜய் சேதுபதி – யோகி பாபு; இந்த ஆட்டம் எப்படி?

தனது குற்றப் பின்னணியை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க மலேசியா வருகிறார் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கே, தொழிலதிபராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் யோகி பாபு (அறிவு) அவரைத் தனது நண்பனின் உறவினராக அறிமுகப்படுத்தி, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு, எதிர் வீட்டில் வசிக்கும் நாயகி ருக்குவுக்கும் (ருக்மணி வசந்த்) போல்ட் கண்ணனுக்கும் காதல் மலர்கிறது. இந்தச் சூழலில், ருக்குவுக்கு அவரது வளர்ப்புத் தந்தையால் (பப்லு பிருத்விராஜ்) சொத்துப் பிரச்னை இருப்பது தெரியவருகிறது. அதைத் தீர்த்தால் … Read more

அறக்கட்டளையை மூடும் ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு

சென்னை ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணு தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடப்போவதாக அறிவித்துள்ளார் அண்மையில் சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு, :என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம். … Read more

Switzerland: நிலச்சரிவு முன் எச்சரிக்கை, மீட்பு பணிகள்; காயம்பட்ட மாடு ஹெலிகாப்டரில் மீட்பு..

சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் என்ற மலைத்தொடருக்கு அருகே உள்ள கிராமத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் இருந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தெற்கு வாலெய்ஸ் மாகாணத்தில் (மாநிலம்) உள்ள பிளாட்டனில் வசிக்கும் 90 -க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாறைகள் விழும் அபாயம் உள்ளதாக கூறிய வாலெய்ஸில் உள்ள அதிகாரிகள், இரண்டு பகுதிகளைத் தவிர, ஆல்பைன் கிராமத்திலிருந்து மக்கள் மற்றும் கால்நடைகள் என சுமார் 300 … Read more

ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர், ஓட்டுநர், காவலர் பணிக்கான வயது வரம்பை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 39 ஆக உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாண்டுகளுக்கும் குறைவாக காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர் உள்ளிட்ட பணியிடங்களை மாவட்ட அளவில் நிரப்பிக் கொள்ளலாம் என்று … Read more

‘விமானத்தில் சேதம்; அவசரமாக தரையிறங்க வேண்டும்’ – இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்!

புதுடெல்லி: டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக் கூறியும் பாகிஸ்தான் அனுமதி மறுத்த நிலையில் விமானி சாதுர்யமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நடந்தது என்ன? – கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து … Read more