"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" – உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில், “மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் … Read more

தூய்மை மிஷனில் இணைந்து செயல்படுவோம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் … Read more

“நாம் எதிரிகள் அல்ல… நண்பர்கள்!” – கமலின் கன்னட சர்ச்சை குறித்து டி.கே.சிவகுமார் கருத்து

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்த சர்ச்சை கருத்துகள் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக வாழ வேண்டும்’ என்று கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “இதை அரசியல் பிரச்சினையாக்க வேண்டாம். நாம் அனைவரும் அண்டை மாநிலங்கள். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்து ஒன்றாக … Read more

மழைக்கு குட் பாய்.. இனி வெயில் கொளுத்த போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை!

TN weather update: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், இன்று (ஜூன் 02) முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு… SRH வீரரின் ஷாக் அறிவிப்பு – என்ன காரணம்?

Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Heinrich Klaasen Retirement: ‘எனக்கு சோகமான நாள்’ இதுகுறித்து ஹென்ரிச் கிளாசென் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதை அறிவிக்கும் இந்த நாள் எனக்கு மிகவும் சோகமான நாள் எனலாம். எதிர்காலத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை முடிவு செய்ய எனக்கு … Read more

Vikram Sugumaran: "அண்ணன் பாலுமகேந்திரா சாரிடம் வேலை பார்க்கும்போது…" – கலங்கிய மாரி செல்வராஜ்

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார். Vikram Sugumaran சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். விக்ரம் சுகுமாரன் மறைவு குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், “விக்ரம் சுகுமாரன் அண்ணனை பாலுமகேந்திரா சாரிடம் அவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எனக்குப் பழக்கம். ஒரு தம்பியாக நினைத்து என்னிடம் சினிமா பற்றி நிறைய விஷயங்களைப் பேசியிருக்கார். … Read more

சிக்கிம் நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் மரணம் – 9 பேர் மாயம்

சாட்டென் சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3  ராணுவ வீரர்கள் உயிரிழ்ந்து 9 பேர் காணாமல் போய் உள்ளனர். கடந்த 29 ஆம் தேதி முதல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் … Read more

Gukesh vs Magnus Carlsen: குகேஷிடம் முதல்முறையாகத் தோல்வி – ஏமாற்றத்தில் மேஜையில் குத்திய கார்ல்சன்

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர். Magnus Carlsen vs Gukesh முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில் குகேஷை 55-வது நகர்வில் கார்ல்சன் வீழ்த்தினார். அந்த வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் கார்ல்சன், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி … Read more

‘ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த சாரை காப்பாற்ற முடியாது’ – எடப்பாடி பழனிசாமி

சென்னை: “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை … Read more

அசாமில் கனமழையால் 4 லட்சம் பேர் பாதிப்பு – முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேரில் ஆறுதல்

குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more