தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று(ஜுன்1) நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், “சமீபத்தில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இசை கச்சேரி நடத்த பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பொழுது அப்பாடல் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் பேசுவார்கள். இளையராஜாவின் தீவிர பக்தன் ஆன நான் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் செட் அசிஸ்டன்டாக வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.