கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதனால், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.