மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன் டிஆர், த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று (ஜூன் 6) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கமல் ஹாசன் ரசிகர்களுடன் சேர்ந்து, இயக்குநர் அமீர் பார்த்திருக்கிறார். கேக் வெட்டியும் கொண்டாடி இருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “எனது முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்திற்கு மணிரத்னம், கமல் சாரும் வந்தார்கள்.
‘நாயகன்’ படத்தை எப்படி கல்லூரி காலத்தில் ஒரு ரசிகனாகப் பார்க்க முதல் நாள், வந்தேனோ அதுபோல ‘தக் லைஃப்’ படத்தை ஒரு ரசிகனாகப் பார்க்க வந்துள்ளேன்” என்றிருக்கிறார்.
கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், “அது ஒரு தேவையில்லாத அரசியல். அவர் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை.
.jpg)
குறைத்து மதிப்பிடவும் இல்லை. கன்னடத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சமயத்தில் கன்னட மொழி குறித்துப் பேசுவது தேவையில்லாதவை” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…