இந்தியாவில் சிறந்த ஓப்பனிங் வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா இருந்து வருகிறார். வீரேந்திர சேவாக்கிற்கு பிறகு நீண்ட நாட்களாக இருந்த வெற்றிடத்தை ரோஹித் சர்மா நிரப்பி உள்ளார். தற்போது 38 வயதாகும் அவர் அதிரடியாக ஆடுவதில் சிறந்த விலங்குகிறார். கிட்டத்தட்ட ஒரு நாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார் ரோஹித். கடந்த ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தார், அதன் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் இந்த மாதம் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் ரோஹித்.
மேலும் படிங்க: சுனிதா வில்லியம்ஸை போல்… விண்வெளிக்கு பறக்கும் அடுத்த இந்தியர் – யார் இந்த சுபான்ஷு சுக்லா?
இருப்பினும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். கடைசியாக துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடி இருந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். ரோகித் சர்மா பல சாதனைகளை புரிந்து இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வென்ற பிறகு ஓய்வை அறிவிப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் 2027 வரை விளையாடுவேன் என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் ரோஹித் சர்மா மற்றும் அணி தேர்வாளர்களுக்கு மத்தியில் தற்போது வரை 2027 உலக கோப்பை பற்றி எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். மேலும் கடைசி போட்டியில் தன்னைத்தானே நீக்கி கொண்டார். இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் தனது பேட்டிங் மூலம் அனைவரது வாயையும் அடைத்தார். அதேபோல ஐபிஎல் 2025ல் 15 போட்டியில் விளையாடி 418 ரன்கள் குவித்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம் வொயிட் பால் கிரிக்கெட்டில் தான் இன்னும் சிறந்த பேட்டர் என்பதை நிரூபித்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மா 2027 வரை விளையாடுவாரா என்பது சந்தேகமே.
மேலும் படிங்க: ரிஷப் பண்டுக்கு காயம்… இந்திய அணிக்கு பெரிய அப்செட்… ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata