சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் டிக் டாக்கில் 16.3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான கபீப் லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கை காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. விசா காலம் முடிந்த பின்னும் அமெரிக்காவில் சட்டவிரோதமானத் தங்கிவந்ததாகக் கூறி குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. கபீப் லாம் மீது நாடு கடத்தல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் […]
