WTC இறுதிப் போட்டி 2025: பல பெரிய சாதனைகளை படைத்து காகிசோ ரபாடா!

WTC Final 2025 Latest Update: இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் அசத்தலான பந்துவீச்சுக்கு முன்னால், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கு சுருண்டது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணியும் நல்ல தொடக்கத்தை பெறவில்லை. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடர் பற்றி பார்ப்போம்.

சாதனை பதிவு செய்த காகிசோ ரபாடா

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி எடுத்திருந்தது. இந்த போட்டியில், காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது பெயரில் சாதனைகளைப் பதிவு செய்தார். அதாவது லார்ட்ஸில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபாடா ஆனார். முன்னதாக ஆலன் டொனால்ட் மற்றும் மகாயா நிடினி மட்டுமே இதைச் செய்ந்திருந்தார்கள். 

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனை சமன் செய்த ரபாடா

அதே நேரத்தில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை அவர் சமன் செய்தார். இருவரும் 156-156 என்ற கணக்கில் உள்ளனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி 5 விக்கெட்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றார். முன்னதாக, 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் இதைச் செய்தார்.

ஆலன் டொனால்டை முந்திய காகிசோ ரபாடா

தென்னாப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ரபாடா ஆலன் டொனால்டையும் முந்தியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ரபாடா 332 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆலன் டொனால்ட் 330 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடரவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.