அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 மழையால் ரத்து

டப்ளின் ,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்த தொடரை முடித்து கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் இன்று தொடங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.

போட்டி நடைபெறும் பகுதியில் பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது .அயர்லாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி 14ம் தேதி நடைபெற உள்ளது .

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.