சென்னை: நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி காமானார். இவருக்கு வயது 99. பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கொல்லங்குடி கருப்பாயி. இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. இவர் வயது முதிர்வு காரணமாக சொந்த ஊரில் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 99 வயதாகும் நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் வசித்தவந்த நிலையில், வயது மூப்பால் காலமானார் […]
