ED வளையத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்

Bad News For Indian Cricketers: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளுவோம்.

யுவராஜ் சிங்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்கும்

ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, அமலாக்க இயக்குநரகம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம் விசாரிக்க உள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பந்தய வலைத்தளங்களுடனான (Betting Websites) விளம்பர தொடர்புகள் காரணமாக யுவராஜ் விசாரிக்கப்படுகிறார். 

முன்னாள் சுழற்பந்து வீச்சாளரிடமும் ED விசாரணை

1xBet, FairPlay, Parimatch மற்றும் Lotus365 போன்ற தடைசெய்யப்பட்ட வலைத்தளங்களின் விளம்பர நடவடிக்கைகள் குறித்த தற்போதைய விசாரணையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தும்.

அமலாக்கத் துறை விசாரணையில் சுரேஷ் ரெய்னா?

அமலாக்கத் துறை விசாரணை நடந்த உள்ள மூன்றாவது கிரிக்கெட் வீரர் இந்தியா மற்றும் சிஎஸ்கே (CSK) அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆவார். ஊடக அறிக்கைகளின்படி, “இந்த பந்தய தளங்கள் விளம்பர பிரச்சாரங்களில் 1xbat மற்றும் 1xbat விளையாட்டு கோடுகள் போன்ற மாற்று பெயர்களைப் பயன்படுத்துகின்றன. விளம்பரங்களில் பெரும்பாலும் QR குறியீடுகள் அடிப்படையில் செயல்ல்படுகின்றன. இதன் காரணமாக பயனர்களை பந்தய தளங்களுக்கு ஈசியாக உள்ளே செல்கின்றன. இது இந்திய சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என ஒரு உயர் அதிகாரி NDTV ஊடகத்திடம் பெட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் உலகம் முழுவதும் மற்றும் இந்தியாவில் உள்ள லீஜென்ட்ஸ் லீக்குகளில் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.

ஊர்வசி ரவுடேலா மற்றும் சோனு சூட் -அமலாக்கத் துறை விசாரணை

பாலிவுட் நட்சத்திரங்கள் ஊர்வசி ரவுடேலா மற்றும் சோனு சூட் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. “சில பிரபலங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட வாய்ப்புள்ளது” என்று அந்த அதிகாரி NDTV-விடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.