டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கனடா அணி தகுதி

ஆன்டாரியோ,

20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ரன்னில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 13-வது அணியாக தகுதி பெற்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.