திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை மேலும் சில நாட்கள் தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :