Mera Ration App: மத்திய அரசு அரசின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் பெறுவதை எளிமையாக்கும் வகையில் மேரா ரேஷன் 2.0 செயலியை உருவாக்கியுள்ளது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய செயலி தான். இந்த செயலி பயன்படுத்தி நாடு முழுவதும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும், புதிய ரேஷன் கார்டுக்கு கூட இந்த செயலி வழியாகவே விண்ணப்பிக்கலாம். அதேபோல், ரேஷன் கடையில் பொருட்கள் பெற ரேஷன் கார்டு காட்டாமல் இந்த ஒரு செயலியை (ஆப்) பயன்படுத்தி உங்கள் பொருட்களை பெறவும் முடியும். ரேஷன் கார்டு இல்லாமலேயே உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் நம்பரை இந்த செயலியில் உள்ளிட்டு உங்களின் ரேஷனை பெற முடியும்.
மத்திய அரசின் செயலியின் நோக்கம்
– ரேஷன் கார்டுக்கு பதிலாக “மேரா ரேஷன் 2.0” ஆப் பயன்படுத்தப்படும்.
– தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் எந்த மாநிலத்திலும் எளிதாக ரேஷன் பெறலாம்.
– ரேஷன் கடையில் ஆதார் அடிப்படையில் OTP சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யப்படும்.
மேரா ரேஷன் 2.0 ஆப் பயன்படுத்துவது எப்படி?
– Google Play Store / Apple App Store-ல் “Mera Ration 2.0” ஆப் டவுன்லோடு செய்யவும்.
– ஆப்பில் ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்டு OTP பெறவும்.
– OTP உள்ளிட்டு உங்கள் டிஜிட்டல் ரேஷன் விவரங்களை பாருங்கள்.
– இதை ரேஷன் கடையில் காட்டி, தானியம் பெறுங்கள்.
ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
– உங்கள் மாநில உணவு & பொது விநியோக துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்கு செல்லவும். தமிழ்நாட்டுக்கு (e.g., tnpds.gov.in) செல்லவும்.
– புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தேர்ந்தெடுக்கவும்.
– பெயர், முகவரி, ஆதார், வாக்காளர் அட்டை போன்ற விவரங்களை நிரப்பவும்.
– ஆதார், மின்சார பில் போன்ற ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
– விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்.
– விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.