ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar address update : மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மற்ற ஆவணங்களைக் காட்டிலும் அரசின் சேவைகளைப் பெற பிரதான ஆவணமாக ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களால் முகவரியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் UIDAI-இன் myAadhaar போர்ட்டலை பயன்படுத்தி எளிதாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் சரியான முகவரி சான்று உங்களிடம் இருக்க வேண்டும்.

ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்றுவதற்கான வழிமுறைகள்

– myAadhaar இணையதளத்திற்குச் செல்லவும்

– https://myaadhaar.uidai.gov.in என்பதைத் திறந்து, உங்கள் ஆதார் எண், CAPTCHA குறியீடு மற்றும் OTP (பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்) உள்ளிட்டு லாகின் செய்யவும்.

– டாஷ்போர்டில் “Update Aadhaar” என்பதைக் கிளிக் செய்யவும்.

– ‘Update Aadhaar Online’ தேர்வு செய்யவும்

– அங்கு ‘Address Update’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்

– வழிமுறைகளைப் படித்து “Proceed to Update Aadhaar” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

– பின்னர், Choose Address என்ற ஆப்சனை  “Proceed” செய்யவும்.

– புதிய முகவரியை உள்ளிடவும்.  அஞ்சல் அலுவலகம் மற்றும் பின்கோடு ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும்.

– முகவரி சான்று ஆவணத்தை அப்லோட் செய்து “Next” கிளிக் செய்யவும்.

– தகவலைச் சரிபார்த்து கட்டணம் செலுத்தவும். ரூ. 50 செலுத்த வேண்டும்.

– கடைசியாக உங்களுக்கு ஒரு SRN (Service Request Number) வழங்கப்படும், இதை பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளவும்

ஆதார் முகவரி மாற்றத்திற்கான தேவையான ஆவணங்கள்

UIDAI 15-க்கும் மேற்பட்ட முகவரி சான்றுகளை ஏற்கிறது. அவற்றில் சில:

பாஸ்போர்ட், வங்கி/போஸ்ட் ஆபீஸ் பாஸ்புக், ரேஷன் கார்டு அல்லது வோட்டர் ஐடி, மின்சார/தண்ணீர் பில் (கடந்த 3 மாதங்களுக்குள்), வாடகை ஒப்பந்தம் (Registered/Non-Registered), வீடு வரி ரசீது (1 வருடத்திற்குள்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்கலாம். 

ஆதார் முகவரி மாற்றத்தின் நிலையைச் சரிபார்க்கவும்

– https://myaadhaar.uidai.gov.in-ல் “Check Update Status” தேர்வு செய்யவும்.

– உங்கள் SRN எண் மற்றும் OTP உள்ளிடவும்.

– முகவரி மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதைப் பார்க்கலாம்.

முகவரி அப்டேட் ஆன ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?

– https://myaadhaar.uidai.gov.in-ல் “Download Aadhaar” தேர்வு செய்யவும்.

– உங்கள் ஆதார் எண்/விர்ட்சுவல் ஐடி மற்றும் OTP உள்ளிடவும்.

– “Password” கொண்டு PDF ஐ திறக்கவும் (உங்கள் பிறந்த ஆண்டு & மாதம், எ.கா: 1995MAY).

ஆதார் முகவரியைப் புதுப்பிப்பது ஏன் முக்கியம்?

அரசு திட்டங்கள், வங்கி சேவைகள் போன்றவற்றை எளிதாக பெறலாம். விதிப்படி, UIDAI ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஆதார் தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.