சீன கண்காணிப்பு கேமரா உற்பத்தியாளரான ஹிக்விஷனுக்கு தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக கனடாவில் செயல்பாடுகளை நிறுத்த கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி வெள்ளியன்று தெரிவித்தார். ஹாங்சோ ஹிக்விஷன் டிஜிட்டல் டெக்னாலஜி கோ என்றும் அழைக்கப்படும் ஹிக்விஷன், சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மக்கள் மற்றும் பிற முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவியாக பல துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்கள் கூறிவருகின்றனர். இதையடுத்து கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் உபகரணங்கள் […]
