Gautam Gambhir head coach: கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கிட்டத்தட்ட கௌதம் கம்பீர் பொறுப்பேற்று ஓராண்டுகள் முடிவடைய உள்ளது, அவரது தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றதை விட அதிகமான தோல்விகளை தான் சந்தித்து உள்ளது. ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுடன் கவுதம் கம்பீர் வேலை செய்துள்ளார். ராகுல் டிராவிட்டிற்கு பிறகு ரிக்கி பாண்டிங், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வாக வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
மேலும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய ஆர்சிபி பிளேயர், எப்ஐஆர் பதிவு – முழு விவரம்
இருப்பினும் அவர்களை ஓரம் கட்டி விட்டு கௌதம் கம்பீருக்கு இந்த முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டது. கௌதம் கம்பீரின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. இருப்பினும் வெற்றிகளை விட தோல்களை தான் அதிகமாக சந்தித்துள்ளது இந்திய அணி. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி என தொடர்ந்து அதிகமான தோல்விகளை இந்திய அணி சந்தித்து வந்தது.
கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு மூன்று தொடர்களுக்கும் மூன்று வித்தியாசமான கேப்டன்கள் பதவி ஏற்றுள்ளனர். டெஸ்ட் போட்டிகளுக்கு சுப்மான் கில், டி20 போட்டிகளுக்கு சூர்யாகுமார் யாதவ், ஓடிஐ போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல கம்பீர் வந்த பிறகு தான் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பை வரை கௌதம் கம்பீர் தான் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 5-0 என்று இந்திய அணி தோற்றாலும் கௌதம் கம்பீர் மாற்றப்பட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
“தற்போது இந்திய அணி சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் விளையாடி வருகிறது. இது அடுத்த 10 வருடங்களுக்கான மாற்றம் ஆகும். எனவே இந்த சமயத்தில் கம்பீர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறார். அடுத்த சில ஆண்டுகளில் இந்திய அணி மீண்டும் பலம் வாய்ந்த அணியாக இருக்கும். எனவே இந்த சமயத்தில் வெற்றி தோல்வி என்பது சாதாரண ஒரு விஷயம் தான். தோல்விகள் காரணமாக கவுதம் கம்பீர் மாற்றப்பட வாய்ப்பு இல்லை” என்று பிசிசிஐ யின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. பின்தங்கிய இந்திய அணி.. எத்தனாவது இடம்?