இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.

4 செயலிகள்: உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் முதல் இடத்தில் யூடியூப், இரண்டாவது இடத்தில் வாட்ஸ்-அப், மூன்றாவது, நான் காவது இடங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் உள்ளன.

3 காரணங்கள்: குடும்பத்தினர், நண்பர்களோடு தொடர்பில் இருக்கவும், ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கவும், செய்திகளைத் தெரிந்துகொள்ளவும் ஆகிய 3 காரணங்களுக்காக மக்கள் சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துவதாக ‘க்ளோபல் வெப் இண்டெக்ஸ்’ அமைப்பின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் இடம்: உலக அளவில் சுமார் 174 கோடி பேர் இன்ஸ்டகிராம் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில் அதிக இன்ஸ்டகிராம் (41.4 கோடி பேர்) பயனர்களைக் கொண்ட நாடாக முதல் இடத்தில் இந்தியா உள்ளது.

ஜூன் 30 – சமூக ஊடக நாள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.