ஜார்ஜியா,
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் (இந்திய நேரப்படி இன்று) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் – எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற எம்.ஐ.நியூயார்க் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ.நியூயார்க் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அடித்த சதத்தையும் சேர்த்து பாப் டு பிளெஸ்சிஸ் கேப்டனாக டி20 கிரிக்கெட் இதுவரை 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் கேப்டன் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் விராட் கோலி 3-வது இடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. பாப் டு பிளெஸ்சிஸ் – 8 சதங்கள்
2. மைக்கேல் க்ளிங்கர்/பாபர் அசாம் – 7 சதங்கள்
3. விராட் கோலி – 5 சதங்கள்
4. ஜேம்ஸ் வின்ஸ் – 2 சதங்கள்