வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

பாட்னா: பிஹார் மாநிலம் பாட்​னா-கயா இடையே உள்ள ஜெக​னா​பாத் பகு​தி​யில் ரூ.100 கோடி​யில் சாலை அமைக்க நெடுஞ்​சாலைத்​துறை முடிவு செய்​தது.

ஜெக​னா​பாத் பகு​தி​யில் சுமார் 7.48 கிலோமீட்​டர் தூரம் அமை​யும் இந்த சாலை​யில் நடு​வில் இருந்த மரங்​கள் இடையூறாக இருந்​தன. இதனையடுத்து அந்த மரங்​களை அகற்​றும்​படி வனத்​துறை​யிடம் மாவட்ட நிர்​வாகம் கோரிக்கை வைத்​தது. ஆனால், இதற்கு பதிலாக வனத்​துறைக்கு 14 ஹெக்​டேர் நிலத்தை ஒதுக்க வேண்​டும் என மாவட்ட நிர்​வாகத்​துக்கு வனத்​துறை அதி​காரி​கள் கோரிக்கை வைத்​தனர்.

ஆனால், இதை நெடுஞ்​சாலைத்​துறை அதி​காரி​கள் ஏற்​க​வில்​லை. இதனால், அங்கு சாலை அமைப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்து வழி​யில் இருந்த மரங்​களை அகற்​றாமலேயே அங்கு சாலையை நெடுஞ்​சாலைத்​துறை​யினர் அமைத்து விட்​டனர். மரங்​கள், சாலை​யின் ஓரம் அமை​யாமல் சாலைக்கு நடு​வில் ஆங்​காங்கே உள்​ளன.

மரங்​கள் வரிசை​யாக இல்​லாமல் அங்​கொன்​றும், இங்​கொன்​றும் குறுக்​கும் நெடுக்​கு​மாக உள்​ள​தால் இப்​பகு​தியை கடக்​கும் வாகன ஓட்​டிகள் அச்​சத்​துடன் உள்​ளனர். இதனால் அப்​பகு​தி​யில் விபத்​துகள் ஏற்​படும் அபாய​முள்​ளது என வாகன ஓட்​டிகள் அச்​சம் தெரிவிக்​கின்​றனர்.

ஏற்​கெனவே இப்​பகு​தி​யானது விபத்​துகள் அதி​கம் நடக்​கும் பகு​தி​யாக உள்​ளது. எனவே, மரங்​களை அகற்​று​வதற்கு நடவடிக்கை எடுக்​கவேண்​டும் என்று அவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். இப்​பகு​தி​யில் பெரிய அளவில் விபத்து ஏற்​பட்​டால் அதற்கு யார் பொறுப்​பேற்​பது நெடுஞ்​சாலைத்​துறையா அல்​லது வனத்​துறையா என்​றும் அவர்​கள்​ கேள்​வி எழுப்​பு​கின்​றனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.