தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

துசான்பே, தஜிகிஸ்தானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 140 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.21 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 72.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update தினத்தந்தி Related Tags … Read more

ஆங்கிலத்துக்கு அதிக முக்​கியத்து​வம் கொடுக்கின்றனர் என்ற பொருளில்தான் அமித்ஷா பேசினார்: இபிஎஸ்

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கீழடி அகழாய்வு குறித்து முன்​னாள் அமைச்​சர் பாண்​டிய​ராஜன் தெளி​வாக விளக்​கம் அளித்​துள்​ளார். முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா மற்​றும் எனது தலை​மையி​லான அதி​முக அரசு, கீழடி அகழாய்​வுக்​காக மேற்​கொண்ட நடவடிக்​கைகளை முழு​மை​யாக தெரி​வித்​து​விட்​டோம். விரும்​பும் தெய்​வங்​களை வழிபடு​வது நமது உரிமை. அந்த அடிப்​படை​யில், … Read more

முதியோருக்கு ரூ.20-க்கு தாலியை கொடுத்தது ஏன்? – மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் விளக்கம்

மும்பை: ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தாலியை முதிய தம்பதிக்கு ரூ.20-க்கு கொடுத்தது ஏன் என்பது குறித்து மகாராஷ்டிர நகைக்கடைக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கோபிகா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் நிலேஷ் கிவான்சரா கூறியதாவது: என்னுடைய கடைக்கு சில நாட்களுக்கு வந்த ஒரு மூத்த தம்பதியினர் நகைகளை பார்த்துவிட்டு எதுவும் வாங்காமல் திரும்பிச் சென்றனர். சில நாட்கள் கழித்து சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள எங்கள் கடையின் மற்றொரு கிளைக்கு அவர்கள் வந்தனர். … Read more

ஈரான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 3 மூத்த தளபதிகள் உயிரிழப்பு

ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், ஈரான் இடையே நேற்று 9-வது நாளாக போர் நீடித்தது. ஆரம்பம் முதலே ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் … Read more

மேட்​டூருக்கு நீர்​வரத்து 22,469 கனஅடி​யாக அதி​கரிப்பு

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய நிலை​யில், உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்​டுள்​ளது. இதன் காரண​மாக மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 8,218 கனஅடி​யாக​வும், மாலை 16,341 கனஅடி​யாக​வும் இருந்த நீர்​வரத்து நேற்று காலை 18,220 கனஅடி​யாக​வும், மாலை 22,469 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. அணையி​லிருந்து காவிரி … Read more

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா தின விழா: மோடி தலைமையில் 3 லட்சம் பேர் கின்னஸ் சாதனை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா தின நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்று, யோகாசனங்கள் செய்தார். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகில் அமைதி நிலவ, ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு நாடும், சமுதாயமும் யோகாவை தங்கள்வாழ்வில் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் 11-வது ஆண்டு சர்வதேச யோகா தினம் நேற்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் … Read more

அமெரிக்காவை நம்ப முடியாது: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கருத்து

அமெரிக்காவை நம்ப முடியாது. அணு சக்தி தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் (அரபு லீக்) அவசர ஆலோசனை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகள் உள்ளன. அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் … Read more

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார். அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு மனைவி கலைச்செல்வி, மகள் சுபநிதி உள்ளனர். 1980-ல் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அமுல் கந்தசாமிக்கு கட்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். மேலும், மாவட்ட கவுன்சிலராகவும் இருந்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வால்பாறை (தனி) தொகுதியில் போட்டியிட்டு, எம்எல்ஏவானார். தொடர்ந்து, இளைஞரணி … Read more

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்கும் இந்தியா

அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் … Read more