சீனாவில் கனமழை, வெள்ளம்.. மக்கள் பாதிப்பு

பெய்ஜிங், சீனாவில் ஹூனான் மற்றும் ஹுபே மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரால் சூழ்ந்துள்ளன. மத்திய சீனா மற்றும் தென் சீனாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் லிசூய் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பாதுகாப்பு அளவைத் தாண்டி 2 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்தோடுவதால், கரையோரங்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதே போன்று, ஹுபே மாகாணத்திலும், ஏராளமான … Read more

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடிக் கம்பங்களை தமிழகம் … Read more

‘பிஹார் இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயர்வது நிறுத்தப்படுமா?’ – மோடிக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி

பாட்னா: “பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் வருகை என்பது மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளைப் பெறுவதில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்துகிறார்” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார் இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “பிரதமர் மோடி முதல் முறையாக வரவில்லை. அதேபோல பிரதமர் மோடி பிஹாரின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் வரவில்லை. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு … Read more

ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு; 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

டெஹ்ரான்: இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளன. கடந்த 13-ம் தேதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் … Read more

வரும் 27 அன்று டெல்லியில்  காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்

டெல்லி வரும் 27 அன்று காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து இதுவரை 40 கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 27-ந்தேதி கூடுகிறது. … Read more

ஆட்டிசம் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்: ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

சென்னை: ஆட்டிசம் எனப்படும் மனவளர்ச்சி குறைபாடு மிகப்பெரிய சவால். அதற்கான தீர்வுகளை கண்டறிய அதிகளவில் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார். தேசிய அபிலிம்பிக்ஸ் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் சார்ந்த போட்டி ஆகும். மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்து கிடக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டுவரவும் அவர்களின் தொழில்முறை மேம்பாட்டுக்கு உதவவும் இந்த போட்டியை இந்திய தேசிய அபிலிம்பிக்ஸ் சங்கம் நடத்துகிறது. 11-வது சர்வதேச அபிலிம்பிக்ஸ் போட்டி பின்லாந்து நாட்டில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், … Read more

இந்தியர்கள் நாடு திரும்ப வான்வெளியைத் திறக்கிறது ஈரான்!

புதுடெல்லி: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தனது வான்வெளியை ஈரான் திறக்க உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரானிய துணைத் தலைவர் ஜாவத் ஹொசைனி, “இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்காக ஈரான் வான்வெளியைத் திறக்கவுள்ளது. இன்றிரவு தொடங்கி மூன்று சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 1,000 இந்தியர்களை அழைத்து வர இந்தியாவுடன் ஈரான் ஒத்துழைத்து வருகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும். இல்லையெனில் இஸ்ரேல் மற்ற நாடுகளைத் தன்னிச்சையாகத் … Read more

இஸ்ரேல் vs ஈரான்: ராணுவக் கட்டமைப்பு, ஆயுத பலம் யாருக்கு அதிகம்?

உலகில் அதிக ராணுவ வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் 15-வது இடத்திலும் ஈரான் 16-வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேலை ஒப்பிடும்போது ஈரான் ராணுவத்தில் அதிக ராணுவ வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆயுதங்களை ஒப்பிடும்போது ஈரான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ரஷ்யாவின் பழங்கால டி-72, ஜுல்பிகர், காரர் ஆகிய டாங்கிகளை மட்டுமே ஈரான் பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ராணுவ தொழில்நுட்பத்தில் அந்த நாடு முன்வரிசையில் இருக்கிறது. எம்கே5, எம்5 … Read more

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு

2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்காக இருந்த நிலையில், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 37,600 கோடி ரூபாய் இந்த வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இதில், மற்ற வங்கிகளிலிருந்து ஸ்விட்சர்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியர்களின் பணம் சுமார் ரூ.32,000 கோடி என்பது … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு … Read more